Advertisment

கத்தார் மரண தண்டனை: 'மோடி தலையிட வேண்டும்' - முன்னாள் கடற்படை அதிகாரியின் சகோதரி கோரிக்கை

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேரும் எப்படி விசாரிக்கப்பட்டனர் என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், அவர்களின் குடும்பத்தினரின் கத்தார் நீதித்துறை செயல்பாட்டில் நம்பிக்கையை இழந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Qatar death row PM modi must intervene Sister of former Navy officer Tamil News

முன்னாள் கமாண்டர் பூர்ணேந்து திவாரி கடற்படையின் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த நிபுணர் ஆவர். அவர் ஐ.என்.எஸ் (INS) மாகருக்கு கமாண்டராக பணிபுரிந்துள்ளார்.

Indian-navy | qatar: இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வெர்மா, கேப்டன் சவுரப் வஷிஷ்ட், கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுநகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரர் ராகேஷ் ஆகியோர் கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் (Dahra Global Technologies and Consultancy Services) நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனம் கத்தார் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் அது தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது.

Advertisment

இந்நிலையில், இந்த நிறுவனத்தில் பணியாற்றிய இந்தியர்கள் 8 பேருக்கும் கடந்த வியாழக்கிழமை அன்று கத்தார் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த 8 பேரும் கத்தார் நாட்டின் அதிநவீன நீர் மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, கடந்த  2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர். 

அதிநவீன நீர் மூழ்கி கப்பல் தண்னீருக்குள் சென்றுவிட்டால் எதிரி நாட்டினரால் கண்டுபிடிக்க முடியாதது போல் நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஓமன் நாட்டின், ராயல் ஓமானி விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு சொந்தமான ஆகும். அவரையும் கத்தார் நாட்டு உளவுத்துறை கைது செய்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பரில் விடுவித்தனர். 

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலையை  ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களை தண்டனையில் இருந்து விடுவிக்க இந்திய அரசு சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கு பற்றி பேசிய வெளியுறவு அமைச்சகம், "அதிக முக்கியத்துவம்" கொடுக்கபடும் மற்றும் அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Qatar death row | PM must intervene, not much time left: Sister of former Navy officer

'மோடி தலையீட வேண்டும்' - கவலையில் குடும்பத்தினர் 

இந்த நிலையில், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேரும் எப்படி விசாரிக்கப்பட்டனர் என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், அவர்களின் குடும்பத்தினரின் கத்தார் நீதித்துறை செயல்பாட்டில் நம்பிக்கையை இழந்துள்ளனர். ஓய்வு பெற்ற கமாண்டர் பூர்ணேந்து திவாரியின் சகோதரி மீது பார்கவா (54), தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிடம் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், "நேரப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, 8 இந்தியர்களையும் திரும்பக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட முறையில் தலையீட வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார். 

கடந்த வியாழன் அன்று கத்தார் நீதிமன்ற தீர்ப்பின் செய்தி வெளியான பிறகு, பார்கவா தனது சகோதரனின் மரண தண்டனையைப் பற்றி 85 வயதான தனது தாயிடம் தெரிவிக்க மிகவும் தயங்கியுள்ளார். ஏன்னென்றால், 'அவர் ஒரு இதய நோயாளியாக உள்ளார்' என்று பார்கவா கூறினார். அவரது குடும்பத்தினர், வியாழக்கிழமை முதல் கடற்படைத் தலைவரைச் சந்தித்துள்ளதாகவும், விரைவில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். 

குவாலியரில் வசிக்கும் பார்கவா, கடந்த ஆண்டு அக்டோபரில் தங்களது விடுதலைக்காக மையத்தின் உதவியை நாடிய 8 இந்தியர்களின் முதல் உறவினர் ஆவார். ஒரு வருடம் கழித்து, பிரதம மந்திரி தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்று அவர் உணர்கிறார்.

“நாங்கள் முன்னதாக பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தோம். கடந்த ஆண்டு, நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர், இது ஒரு முக்கியமான பிரச்சினை என்றும், இந்த மனிதர்களுக்குத்தான் எங்கள் முன்னுரிமை என்றும் கூறியிருந்தார். ஆனால் இப்போது அது வேறு யாருடைய தலையீடுக்கும் நேரமில்லை. எங்களிடம் அதிக நேரம் இல்லை. நமது 8 வீரர்களை மீண்டும் அழைத்து வருவதற்கு தனிப்பட்ட தலையீடு செய்யுமாறு நமது மாண்புமிகு பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் வேறு யாரையும் நினைக்க முடியாது. 

கத்தார் நட்பு நாடு. அவர்கள் அவர்களை வேறொரு நட்பு நாட்டிற்கு (இந்தியா) திருப்பி அனுப்பலாம். நமது 8 வீரர்களும் திரும்ப வேண்டும். என் தம்பி மட்டுமல்ல, 8 பேரும் தயக்கம் வர வேண்டும்.

என் தம்பி மூத்த குடிமகன். அவருக்கு வயது 63. அவருக்கு 2019ல் பிரவாசி பாரதிய சம்மான் வழங்கப்பட்டது. அவர் ஏன் இஸ்ரேலுக்காக உளவு பார்க்க வேண்டும்? இந்த வயதில் அவர் ஏன் இப்படிச் செய்வார்?” என்று பார்கவா கேள்வி எழுப்பினார். 

கத்தார் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளில் வெளிப்படைத்தன்மை. ஆனால் இங்கிலாந்து நாளிதழான பைனான்சியல் டைம்ஸ் உட்பட இந்தியர்கள் 8 பேர் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.

“இவர்கள் அலங்கரிக்கப்பட்ட கடற்படை வீரர்கள். அவர்கள் அப்பாவிகள். என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்வது கடினம். இது நம் இளைஞர்களுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?” என்றும் பார்கவா கேள்வி எழுப்பினார். 

கமாண்டர் பூர்ணேந்து திவாரியின் குடும்பத்தினர் சமீப காலம் வரை அவருடன் தொடர்பில் இருந்து, வாரத்தில் இரண்டு முறை புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவருடன் பேசுவது வழக்கம். "இன்று ஞாயிற்று கிழமை; நாங்கள் அவருடன் பேச முடியும் என்று நம்புகிறோம். நாம் அவருடன் பேசும் போதெல்லாம், நம்பிக்கையுடனும் நேர்மறையுடனும் இருக்குமாறு அவரை ஊக்குவிக்கிறோம், அதனால் அவர் அமைதியாக இருப்பார். இந்திய அரசு எங்களுடன் உள்ளது என்று அவரிடம் கூறுகிறோம். ‘நீங்கள் கவலைப்பட வேண்டாம், வலுவாக இருங்கள்’ என்று அவரிடம் சொல்கிறோம். அவர் நீரிழிவு நோயாளி மற்றும் இதய பிரச்சினை உள்ளது, ”என்று அவர் கூறினார், 

முன்னாள் கமாண்டர் பூர்ணேந்து திவாரியின் கைது செய்யப்பட்ட உடனேயே, தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு இப்போது அவரது செல்லில் மற்றொரு கைதியும் உள்ளார். அவர் எதிர்கொள்ளும் சரியான குற்றச்சாட்டுகள் பற்றி குடும்பத்தினருக்குத் தெரியுமா என்று கேட்டதற்கு, பார்கவா, “நீதித்துறை செயல்பாட்டில் முழுமையான வெளிப்படைத்தன்மை இல்லை. எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. இது அங்குள்ள சட்ட அமைப்பின் மீது நமக்குள்ள நம்பிக்கையை குலைக்கிறது. அவர்கள் என்ன குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள் என்பது எங்களுக்கு ஒருபோதும் தெளிவாகத் தெரியவில்லை. 8 பேரும் ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என்பது எங்களுக்குத் தெரியும்." என்றும் அவர் கூறினார். 

பின்னணி 

முன்னாள் கமாண்டர் பூர்ணேந்து திவாரி கடற்படையின் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த நிபுணர் ஆவர். அவர் ஐ.என்.எஸ் (INS) மாகருக்கு கமாண்டராக பணிபுரிந்துள்ளார். கிழக்கு கடற்படையின் கடற்படை வழிசெலுத்தல் அதிகாரியாக இருந்துள்ளார். அவர் ராஜ்புத் க்ளாஸ் டிஸ்ட்ராயர் (Rajput-class destroyers) கப்பலிலும் பணியாற்றியுள்ளார். ஓய்வுக்குப் பிறகு, கத்தாருக்குச் செல்வதற்கு முன்பு சிங்கப்பூர் கடற்படை வீரர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். 

பிரவாசி பாரதிய சம்மான் விருதைப் பெற்ற முதல் ஆயுதப் படை வீரரும் ஆவார். அவருக்கு 2019ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார். கடந்த ஆண்டு அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு, அவர் கத்தார் கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Indian Navy Qatar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment