குவாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று ( வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் ரஷ்யா-உக்ரைன் போர், இந்தோ - பசிபிக் கடற்பரப்பில் சீனாவின் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கினர். இந்த நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் உக்ரைனில் நீடித்த அமைதிக்கு அழைப்பு விடுத்தனர், பிராந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான மரியாதையை குறிப்பிட்டுக் கூறினர்.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்பென்னி வோங் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தோ-பசிபிக் கடற்பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு செயல்முறைகள், நடவடிக்கை முயற்சிகளை குறிவைத்து பேசினர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய பணிக்குழுவை அமைக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர் மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்த பணிக்குழுவின் கூட்டம் அமெரிக்காவில் நடத்தப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை தொடர்ந்து குவாட் கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.
குவாட் கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சர்களின் கூட்டறிக்கையில். முதல் முறையாக ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து இடம்பெற்றிருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவில் கூட்டம் நடைபெற்றபோது அவர்களது அறிக்கையில் உக்ரைன் மோதல் பற்றி எதுவும் கூறவில்லை.
நேற்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ரஷ்யா-உக்ரைன் போர் அதைத் தொடர்ந்து ஏற்படும் மிகப்பெரிய மனித பாதிப்புகளை நாங்கள் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது அச்சுறுத்தல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஐநா சபை உட்பட சர்வதேச சட்டத்தின்படி உக்ரைனில் ஒரு விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியின் அவசியத்தை நாங்கள் குறிப்பிட்டுக் காட்டுகிறோம். இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் சர்ச்சைகளுக்கு அமைதியான தீர்வை உருவாக்கக வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
மேலும், "பயங்கரவாதத்திற்கு எதிரான குவாட் பணிக்குழு" ஒன்றை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தோ - பசிபிக் கடற் பிராந்தியத்தில் ஆக்கிரமிப்பு செயல்களை தடுப்பதில் உறுதியாக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.