ஜெய்ஷ் மதரஸாவின் நான்கு கட்டிடங்கள் மீது தாக்கியது உறுதி! - இந்திய விமானப்படை

தாக்குதலுக்குப் பிறகு மதரஸா வளாகத்திற்கு ஏன் பாகிஸ்தான் ராணுவம் சீல் வைத்தது?

இந்திய விமானப்படை கடந்த திங்கள்-செவ்வாய் இரவில் பாலகோட்டில் இருந்த ஜெய்ஷ்-இ-மொஹம்மத் இயக்கத்தின் பயிற்சி முகாம்களின் மீது நடத்திய தாக்குதலில், மதரஸா தலீம்-உல்-குரான் அமைப்பினுடைய வளாகத்தின் உள்பக்க கட்டிடங்கள் தகர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு தரப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த தகவலில், மதரஸா தலீம்-உல்-குரான் வளாகத்தைச் சேர்ந்த நான்கு கட்டிடங்கள், இந்திய விமானப்படையின் தாக்குதலில் தகர்க்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு பற்றி கூறுவது முற்றிலும் யூகத்தின் அடிப்படையில் தான் இருக்கும்.

Synthetic Aperture Radar (SAR) மூலம், அந்த குறிப்பிட்ட நான்கு கட்டிடங்களும் குறிவைக்கப்பட்டு, S-2000 PGM எனப்படும் துள்ளிய தாக்குதல் செலுத்தும் லான்ச்சர் மூலம் அவை தகர்க்கப்பட்டது. இந்திய விமானப் படையின் மிராஜ்-2000 போர் விமானங்கள் மூலம் இந்த குண்டுகள் ஏவப்பட்டது.

மதரஸாவின் இந்த வளாகம் ஜெய்ஷ் அமைப்பால் நடத்தப்பட்டு வந்தது. அந்தப் பகுதி இந்தியாவால் தாக்கப்பட்டது என பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது. ஆனால், அவை தீவிரவாதிகளின் வளாகம் என்பதை மறுத்துள்ளது.

‘தாக்குதலுக்குப் பிறகு மதரஸா வளாகத்திற்கு ஏன் பாகிஸ்தான் ராணுவம் சீல் வைத்தது? மதரஸா பகுதிக்கு ஏன் செய்தியார்களை அனுப்ப பாக். ராணுவம் மறுக்கிறது?’ மௌலானா மசூத் அசாரின் சகோதரர் அங்கு தங்கியிருந்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. L வடிவிலான கட்டிடத்தில் பயங்கரவாதிகள் தங்கியிருந்தனர். அந்த நான்கு கட்டிடத்தில் யார் யாரெல்லாம் தங்கியிருந்தனர் என்பதற்கான ஆதாரம் நம்மிடம் உள்ளது.

அதை நாங்கள் வெளியிட வேண்டுமா என்பதை அரசியல் தலைவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். SAR மூலம் கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள், செயற்கைக்கோள் படங்கள் அளவிற்கு தெளிவாக இல்லை. தவிர, கடந்த செவ்வாய் அன்று நிலவிய கடுமையான மேகமூட்டம் காரணமாக, தெளிவான செயற்கைக்கோள் புகைப்படங்களும் நமக்கு கிடைக்கவில்லை. இது விவாதத்திற்கு உள்ளாக்கப்படலாம்.

மதரஸா மிகக் கவனமாக தேர்வு செய்யப்பட்டு தாக்கப்பட்டது. இதில், மக்கள் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பும் இருக்கிறது.

நாங்கள் செலுத்திய இஸ்ரேல் தயாரிப்பு குண்டான S-2000 PGM கட்டிடங்களை முழுமையாக தகர்க்காது. அது முதலில் கட்டிடத்தை துளையிட்டு உள்ளே விழும். பிறகு, அது வெடிக்கும். இதன் மூலம், அங்கு இருந்த பயங்கரவாதிகளை அழிப்பது தான் இலக்காக இருந்ததே தவிர, கட்டிடங்களை அல்ல.

முதல் நாளில், இந்த கட்டிடங்களின் மேற்கூரை CGI (Corrupted Galvanized iron) மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது SAR படங்கள் மூலம் நாங்கள் தெரிந்து கொண்டோம். தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, மேற்கூரை சரி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், தொழில்நுட்ப நுண்ணறிவுப் பிரிவால், முழு சேதாரத்தை கணக்கிட முடியவில்லை.

மதரஸா வளாகத்தின் முழுக் கட்டுப்பாடும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால், உளவுத் துறையாலும், பாதிப்பு குறித்த துல்லியமான புகைப்படங்கள் மற்றும் உயிர்ச் சேதாரம் குறித்தும் முழுத் தகவல் தர முடியவில்லை.

நம்பிக்கையான தகவல் மற்றும் விவரங்கள் கிடைக்காத பட்சத்தில், பாதிப்பு குறித்து நாங்கள் சொன்னால் யூகத்தின் அடிப்படையில் அமைந்துவிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close