Advertisment

ப்ரியங்கா நிகழ்ச்சியை புறக்கணித்த ரே பரேலி எம்.எல்.ஏ அதிதி சிங்... யோகியின் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம்!

கட்சி பாகுபாடுகளைக் காட்டிலும் மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை அளிப்பேன். இதனால் கட்சி எடுக்கும் நடவடிக்கைக்கும் கட்டுப்படுகிறேன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rae Bareli MLA Aditi Singh attended special session

Rae Bareli MLA Aditi Singh attended special session

Maulshree Seth

Advertisment

Rae Bareli MLA Aditi Singh attended special session : உத்திரப்பிரதேசம் ரே பரேலி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ அதிதி சிங் ஆவார். அவருடைய அப்பா அகிலேஷ் சிங் இதற்கு முன்பு இந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தார். அவர் மரணமடைந்த பிறகு, தற்போது இந்த தொகுதியின் பிரதிநிதியாக அவரை மக்கள் தேர்வு செய்துள்ளனர். யோகி ஆதித்யநாத் தலைமையில் சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருடன் இணைந்து இந்த சிறப்பு கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் பங்கேற்க வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டனர்.

Rae Bareli MLA Aditi Singh attended special session மக்கள் சேவையில் ஈடுபட்டிருக்கும் ரே பரேலி எம்.எல்.ஏ அதிதி சிங்

ஆனால் கட்சியின் உத்தரவையும் மீறி,36 மணி நேரம் நடைபெற்ற அந்த சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்று பேசியுள்ளார் ரே பரேலி தொகுதி எம்.எல்.ஏ அதிதி சிங்.  இது குறித்து கேள்வி எழுப்பிய போது, கட்சி பாகுபாடுகளைக் காட்டிலும் மக்களின் குரல்களை அரசு கேட்க வேண்டும். அதனால் தான் என் தொகுதியின் பிரதிநிதியாக நான் அங்கு சென்றேன். அதற்காகவே தான் மக்கள் என்னை தேர்வு செய்து அனுப்பியுள்ளனர். எனக்கு எது சரியென தோன்றுகின்றதோ அதைத்தான் செய்வேன். அதைத்தான் என் தந்தையும் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.

கட்சிக்கு எதிராக நீங்கள் செயல்படுகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

கட்சிக்கு எதிராக நான் செயல்படுகின்றேனா என்பதை கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். கட்சி எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுகின்றேன் ஆனால் எனக்கு எது சரியாகபட்டதோ அதைத்தான் செய்தேன் என மீண்டும் அழுத்தமாக தெரிவித்தார் அவர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

யோகியை புகழ்ந்து உரை நிகழ்த்திய அதிதி

அதிதி தன்னுடைய தொகுதியில் இருக்கும் காலனி மக்களின் வாழ்வை மேம்படுத்தியதிற்காக யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து பேசியுள்ளார். அப்பகுதியில் மழை நீர் சேகரிப்பில் அரசின் பங்களிப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நிலத்தடி நீர் குறைந்து வருவது குறித்து கவலைப்பட்ட அதிதி புதிய தொழில்நுட்பங்களை அரசு கொண்டு வந்து இந்த பிரச்சனைக்கும் விரைவில் முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாற்று சக்தி குறித்து பல்வேறு ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று கூறிய அவர், சட்டசபையில், எனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதைத்தான் முன்பு பேசியது போலவே தற்போதும் பேசுவேன் என்றும், மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கையை தான் வரவேற்றதாகவும் அறிவித்தார்.   காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் யோகி ஆதித்யநாத்திற்கு ஆதரவாக பேசியுள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது, இது குறித்து எந்தவிதமான கருத்தினையும் தற்போது வரை காங்கிரஸ் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Uttar Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment