ரிலையன்ஸ்ஸை தேர்வு செய்தால் மட்டுமே ரபேல் ஒப்பந்தம் கிடைக்கும் என நிர்பந்தித்தது இந்திய அரசு - டஸ்ஸால்ட் நிறுவனம்

டஸ்ஸால்ட் நிறுவனத்தின் துணை தலைவர் செகலேனின் கருத்து மீண்டும் ஹோலன்டேவின் கருத்திற்கு மீண்டும் வலு சேர்ப்பதாக அமைந்திருக்கிறது

ரபேல் போர் விமான ஒப்பந்தம் ரிலையன்ஸ் தேர்வு : பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இருப்பதாக 2015ம் ஆண்டு நரேந்திர மோடி அறிவித்தார். ஆனால் இதில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து புகார்கள் கூறி வருகிறார்கள். ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம் என பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்திய அரசின் நிர்பந்தம்

இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் செய்தி நிறுவனமான மீடியா பார்ட் ஒரு முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் “டஸ்ஸால்ட் நிறுவனத்தின் மேலதிகாரி ஒருவர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் தான் ஆஃப்செட் பாகங்களை தயாரிக்க முடிவு செய்திருக்கிறது. அந்த கண்டிசனை பூர்த்தி செய்தால் மட்டுமே ரபேல் ஒப்பந்தம் டஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு கிடைக்கும் என்ற நிர்பந்திக்கப்பட்டோம் என்று கூறியிருக்கிறார்.

மீடியாபார்ட், டஸ்ஸால்ட் நிறுவனத்தின் முக்கியமான டாக்குமெண்ட் ஒன்றை கைப்பற்றி இருப்பதாகவும், லோய்க் செகலேன் என்ற துணை தலைமை அதிகாரி DRAL திறப்பு விழா அன்று பேச இருந்த ப்ரசண்டேசனில் இந்த நிர்பந்தம் குறித்து இருந்த தகவல்கள் கிடைத்துள்ளாதாகவும் கூறியிருக்கிறது. ஆனால் இது நாள் வரை மேக் இன் இந்தியா திட்டத்தின் காரணமாகவே ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தோம் என்று டஸ்ஸால்ட் நிறுவனம் கூறி வந்தது.  மேலும் படிக்க : ரபேல் போர் விமான ஒப்பந்தம் : ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு என்ன?

ஆனால் செகலேனின் வாதம் மீண்டும் ஃப்ரான்கோய்ஸ் ஹோலன்டேவின் கருத்திற்கு மீண்டும் வலு சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.  ஹோலெண்டேவின் காதலி ஜூலி கயேத் நடிப்பில் வெளியான ஃப்ரெஞ்ச் திரைப்ப்டம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த ஹோலெண்டே, ரபேல் டீலிற்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் ரிலையன்ஸ் குழுமம் குறித்த பிரான்ஸ் அதிபரின் கருத்து பற்றி கேட்ட போது, டஸ்ஸால்ட் நிறுவனத்தினுடனான ரிலையன்ஸ் குழுமம் ஒப்பந்தத்தில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என கூறிவிட்டது.

2015ம் ஆண்டு அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் போடப்பட்ட 126 ரபேல் போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவித்தார். புதிதாக ஒப்பந்தம் ஒன்றிற்கு கையெழுத்திட்டார் மோடி. அதன்படி 18 விமானங்களுக்கு பதிலாக பறக்கும் நிலையிலேயே சுமார் 36 விமானங்களை பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்க இருப்பதாக கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close