ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட முடியாது – உச்ச நீதிமன்றம் அதிரடி

அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் தலையிட இயலாது என்று கூறி, விசாரணை கோரிய மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

By: Updated: December 14, 2018, 01:56:53 PM

Rafale deal verdict : மோடியின் தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த போது, ஃபிரான்ஸுடன் காங்கிரஸ் செய்து வைத்திருந்த போர் விமான ஒப்பந்தத்தை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு, புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அரசு.

டசால்ட் ஏவியேசன் என்ற நிறுவனத்திடம் சுமார் 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை விட அதிக பொருட்செலவில் மிகக் குறைவான அளவில் விமானங்கள் வாங்குவது தொடர்பாக தங்கள் தரப்பு சந்தேகங்களை கூறி வந்தனர் காங்கிரஸ் கட்சியினர்.

Rafale deal verdict – ஊழல் குற்றச்சாட்டுகள்

அதன் பின்னர். வெளிப்படைத் தன்மையினை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறி இது நாள் வரையில் இந்த ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் சமர்பிக்கப்பட வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஒப்பந்த பேரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்உம் என்று கூறி வழக்கறிஞர் எம்.எல். சர்மா மனு ஒன்றை தாக்கல் செய்தார். பிறகு வழக்கறிஞர் வினீத் தண்டாவும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங்கும் இதே கோரிக்கைகளை கேட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் காங்கிரஸ் எம்.பி. சுனில் ஜக்ஹார்  ( புகைப்படம் டஷ்ஷி தோப்கையால் (இந்தியன் எக்ஸ்பிரஸ்))

ரபேல் போர் விமான ஒப்பந்தம் – காங்கிரஸ் கட்சி சார்பில் மனு

காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷௌரி, மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் ஆகியோர் ரபேல் தொடர்பாக புலனாய்வுத் துறை விசாரணை வேண்டும் என மனுத்தாக்கல் செய்தனர்.

மேலும் படிக்க : ரபேல் போர் விமான ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்தது மத்திய அரசு

Rafale deal verdict  : உச்ச நீதிமன்ற விசாரணை மற்றும் தீர்ப்பு

நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாராணை வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் வைக்கப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மேற்கொண்டார்.

சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த அவர், இது நாள் வரையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சீலிடப்பட்ட கவரில் வைத்து சமர்பிக்க உத்தரவிட்டது.  உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க மத்திய அரசு விலைப்பட்டியல் விவரங்கள் தவிர அனைத்து தரவுகளையும் கொடுத்தது. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட விசாரணையை இன்று காலை மீண்டும் தொடங்கியது உச்ச நீதிமன்றம்.

மத்திய அரசு சமர்பித்த தரவுகள் அனைத்தும் சரியாக இருப்பதாகவும், போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை சரியானது தான் என்றும் தீர்ப்பினை வெளியிட்டது. அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட இயலாது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட இயலாது என்று கூறி ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

சேஞ்சில் பெட்டிசன் ஃபைல் செய்த எதிர்கட்சிகள்

ஆனால் மேல் முறையீடு செய்வோம் என்று காங்கிரஸ் மற்றும் பிரதான எதிர்கட்சிகள் கூறியிருக்கின்றன. மேலும் மக்களின் ஆதரவினை திரட்டும் வகையில் பிரபலமான change.org என்ற இணைய தளத்தில் பெட்டிசன் ஒன்றை சமர்பித்திருக்கிறது காங்கிரஸ். மாற்றத்தை விரும்புபவர்கள் பெட்டிசனில் கையெழுத்திடலாம் என்று கூறி தலைவர்கள் ட்வீட் செய்து வருகிறார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Rafale deal verdict the supreme court friday dismissed the petitions seeking a court monitored probe into the rafale deal

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X