scorecardresearch

இந்தியாவுக்கு, பொருளாதார புலிகளின் அடுத்தடுத்த எச்சரிக்கை

செயற்கை புத்திசாலித்தனம் என்ற அதிக நவீன தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும், குறிப்பாக ஐடி மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் அதிக வீச்சு பெற்று வருகிறது.

If India asks help i will do it says RBI former governor Raghuram Rajan
If India asks help i will do it says RBI former governor Raghuram Rajan

ஆர்.சந்திரன்

இந்தியாவின் பொருளாதார நிலை குறித்தும், வேலை வாய்ப்புகள் குறித்தும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை பால் க்ரூக்மென் கடந்த வாரம் கருத்து தெரிவித்திருந்தார். அப்போது, உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்தியா முயற்சி செய்யாவிட்டால் கடுமையான பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும் என எச்சரித்திருந்தார். இதேபோல, மற்றொரு பொருளாதார அறிஞரும், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தவருமான ரகுராம் ராஜன் தற்போது இந்திய வேலை வாய்ப்புகளை குறித்து மற்றொரு எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, தற்போது Artificial Intelligence, அதாவது செயற்கை புத்திசாலித்தனம் என்ற அதிக நவீன தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும், குறிப்பாக ஐடி மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் அதிக வீச்சு பெற்று வருகிறது. அது வரும் காலத்தில் உயர் தொழில்நுட்ப பணிகளில் வேலை வாய்ப்புகளைக் குறைத்து, அங்கு பிரச்னைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசும்போது, எந்த அளவு வேகத்துக்கு தொழில்நுட்பம் வளர்ந்தாலும், முன்னேற்றங்கள் நடந்து கொண்டே இருந்தாலும், இந்தியா தன்னை மாற்றிக் கொள்வதில் தொழில்நுட்ப விஷயங்களை ஏற்றுக் கொள்வதில் பின்தங்கித்தான் உள்ளது. இன்னும் பல இடங்களில் கோப்புகளில் கையொப்பம் பெற்று ஒப்புதல் தந்தால்தான் காரியம் நடந்ததாக கருதும் நிலைதான் உள்ளது. டிஜிடடல் உலகம் அவர்களைப் பொறுத்தவரை தொலை தூரத்தில் உள்ளது என்றும் கூறினார்.

இந்தியாவை அச்சுருத்தும் வேலைவாய்ப்பின்மை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், உடனடியாக அச்சம் கொள்ள வேண்டிய அவசயிம் எதுவுமில்லை. ஆனால், இன்னும் 10… 15 ஆண்டுகளில் நாம் செயற்கை புத்திசாலித்தனத்தின் சவால்களை கட்டாயமாக சந்திக்க வேண்டிவரும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Key words :

முக்கிய சொற்கள் :

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Raghuram rajan says ai threatens skilled jobs