/tamil-ie/media/media_files/uploads/2018/08/2-115.jpg)
ராகுல் காந்தி
திமுகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார்.
வாழ்த்து மழையில் ஸ்டாலின்:
இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமாப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கட்சியின் பொதுச்செயலாளா் க.அன்பழகன், தலைவா் மற்றும் பொருளாளா் பதவிக்கு வேறு நபா்கள் போட்டியிடாததால் தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாராக துரைமுருகனும் ஒருமனதாக தோ்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தி.மு.க. தலைவா் ஸ்டாலினும், பொருளாளா் துரைமுருகனும் அண்ணா மற்றும் கருணாநிதியின் புகைப்படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். மேலும், ஸ்டாலினுக்காகவே உருவாக்கப்பட்ட கட்சியின் செயல் தலைவா் என்ற பொறுப்பு நீக்கப்பட்டது.
இந்நிலையில், திமுகவின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
Congratulations to Shri M K Stalin on being elected President of the DMK. I wish him happiness & success as he begins a new chapter in his political journey. @mkstalin#DMKThalaivarStalin
— Rahul Gandhi (@RahulGandhi) 28 August 2018
இதுகுறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தி.மு.கவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள். அரசியல் பயணத்தில் அவர் தொடங்கும் இந்தப் புதிய அத்தியாயத்தில் அவருக்கு மகிழ்ச்சியும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.