Advertisment

காங்கிரஸ் - சி.பி.ஐ மீது பாய்ந்த மம்தா; 'கேரளாவில் சி.பி.எம் - பா.ஜ.க கள்ளக் கூட்டணி': ராகுல் குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சி.பி.ஐ(எம்) கட்சிகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்றும், அக்கட்சிகள் பா.ஜ.க-வின் ஏஜெண்டுகள் என்றும் தாக்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Rahul alleges CPM BJP nexus and Mamata Banerjee hits out Congress CPIM TAMIL NEWS

பா.ஜ.க - சி.பி.ஐ (எம்) ஆகிய இரு கட்சிகளும் கள்ளக் கூட்டணியில் உள்ளன என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருக்கிறார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Rahul Gandhi | Mamata Banerjee | Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சி.பி.ஐ(எம்)) ஆகிய கட்சிகளை முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Congress, CPI(M) not INDIA in Bengal…they are BJP agents,’ Mamata Banerjee hits out

மம்தா தாக்கு 

மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், அம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் சி.பி.ஐ(எம்) கட்சிகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்றும், அக்கட்சிகள் பா.ஜ.க-வின் ஏஜெண்டுகள் என்றும் தெரிவித்துள்ளார். 

முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை என்றும், பா.ஜ.க 200 இடங்களுக்கு மேல் பெறாது என்றும்தெரிவித்தார். “சிலர் சொல்கிறார்கள், நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம்.  எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறுகிறார்கள். இந்தியா கூட்டணி மேற்கு வங்கத்தில் இல்லை. அந்த கூட்டணி டெல்லிக்கு சொந்தமானது.

இங்கு காங்கிரஸும் சி.பி.எம்-மும் இந்தியா கூட்டணி இல்லை. அவர்கள் பா.ஜ.க. அவர்களுக்கு ஒரு ஓட்டு என்பது பா.ஜ.க-வுக்கு இரண்டு ஓட்டு போடுவதற்கு சமம். அவர்களுக்கு ஒரு ஓட்டு கூட போடாதீர்கள். வரும் நாட்களில் எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியாவை நாங்கள் தான்  வழிநடத்துவோம். ஆனால், மேற்கு வங்கத்தில் சி.பி.ஐ (எம்) மற்றும் காங்கிரஸூம் பா.ஜ.க-வின் ஏஜெண்டுகள். எனவே நான் அவர்களை இங்கு ஆதரிக்க மாட்டேன். 

நாட்டில் பா.ஜ.க-வுக்கு 200 இடங்கள் கூட கிடைக்காது. அனைத்து ஆய்வுகளும் போலியானவை. கணக்கெடுப்பில் லட்சக்கணக்கான ரூபாய் கொட்டப்பட்டுள்ளது. அதைக் கேட்காதீர்கள். பா.ஜ.க வெற்றி பெறாது.”என்று அவர் கூறினார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Two chief ministers are in jail, but not Pinarayi Vijayan?’: In Kerala, Rahul alleges CPM-BJP nexus

ராகுல் குற்றச்சாட்டு 

இதனிடையே, கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்தியில் ஆளும் பா.ஜ.க முதல்வர் பினராயி விஜயனின் சி.பி.ஐ (எம்) கட்சியை ஏன் தாக்கி பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பா.ஜ.க - சி.பி.ஐ (எம்) ஆகிய இரு கட்சிகளும் கள்ளக் கூட்டணியில் உள்ளன என்றும் அவர் குற்றம்சாட்டி இருக்கிறார். 

கண்ணூரில் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, “இரண்டு முதல்வர்கள் சிறையில் உள்ளனர். கேரள முதலமைச்சருக்கு அது நடக்காமல் போனது எப்படி? நான் பா.ஜ.க-வை வாரத்தில் 24 மணி நேரமும் தாக்கிப் பேசி வருகிறேன். ஆனால், கேரள முதல்வர் என்னை வாரத்தில் 24 மணி நேரமும் தாக்கிப் பேசி வருகிறார். இது சற்று குழப்பமாக உள்ளது.

பினராயி விஜயன் தான் கருத்தியல் ரீதியாக பா.ஜ.க-வை எதிர்த்துப் போராடுவதாகக் கூறுகிறார். ஆனால் நீங்கள் பா.ஜ.க-வுடன் சித்தாந்த ரீதியாக போராடும்போது, ​​அவர்கள் உங்களிடம் உள்ள அனைத்தையும் கொண்டு தாக்குகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், கேரள முதல்வர் மீது எந்த தாக்குதலும் இல்லை. இது கேரள மக்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்” என்று அவர் கூறினார்.

கடந்த மாதம் குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கான விதிகள் அறிவிக்கப்பட்ட பிறகும், ராகுல் அமைதியாக இருப்பதாக கேரள முதல்வர் விஜயன் குற்றம் சாட்டி இருந்தார். கடந்த புதன்கிழமை பாலக்காட்டில் அவர் பேசுகையில், “காங்கிரஸ், குறிப்பாக ராகுல், சி.ஏ.ஏ குறித்து மௌனமாக இருப்பது ஏன்? சி.ஏ.ஏ தொடர்பாக சங்க பரிவாரத்தின் அணுகுமுறை தங்களுக்கு உள்ளது என்பதை காங்கிரஸ் ஒப்புக்கொள்ள வேண்டும்." என்று அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Rahul Gandhi Mamata Banerjee Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment