நாட்டின் ஸ்தாபக தந்தைகள் எதிர்பார்த்ததை விட குறைந்த அளவிலேயே அரசியலமைப்பு மக்களுக்கு உதவுகிறது, இது ஒரு வெற்றியும் தோல்வியும் கூட என்று ராகுல் காந்தி லக்னோவில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
வரும் காலங்களில் காங்கிரஸும் தனது அரசியலை மாற்ற வேண்டும். காங்கிரசும் தவறு செய்துவிட்டது, என்றார்.
இடஒதுக்கீடு, சாதி அமைப்பு மற்றும் அரசியலமைப்பின் மீதான "தாக்குதல்கள்" பற்றி அவர் பேசினார். ”நாட்டில் உள்ள ஏராளமான மக்களின் எதிர்காலம் பிறப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்படுகிறது. மக்கள் எந்தப் பணிக்குத் தகுதியானவர்கள், எந்தப் பணியைச் செய்ய முடியாது என்பதைத் தீர்மானிக்கும் சிறு பிரிவுகளாக மக்கள் உள்ளனர்.
இந்துஸ்தானில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்... அவர்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கவில்லை, மாறாக சமூகம் அதை செய்தது. இதில் எவ்வளவு திறன் இழந்தோம்?
இருப்பினும், தங்கள் வாழ்நாள் முழுவதும் அரசியலில் அதிகாரத்தின் பின்னால் ஓடுபவர்கள், இந்த யதார்த்தத்தை ஏற்க மாட்டார்கள், அவர்கள் தங்களுடைய யதார்த்தத்தையோ மற்றவர்களையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று ராகுல் கூறினார்.
Read in English: Rahul Gandhi admits: Congress made mistakes, will need to change its politics
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“