scorecardresearch

காஷ்மீர் பனிக்கட்டிகளை மேலே போட்டு விளையாடிய ராகுல் – பிரியங்கா; அண்ணன்- தங்கை அன்புச் சண்டை

ராகுல் காந்தி தனது 4,000 கி.மீ பாரத் ஜோடோ யாத்திரையை ஞாயிற்றுக்கிழமை முடித்துக் கொண்டதையடுத்து, காங்கிரஸ் கட்சி நிறைவு விழாவுக்கு தயாராகி வருகிறது.

rahul gandhi, priyanka gandhi, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை, bharat jodo yatra, congress, congress news, rahul gandhi priyanka gandhi photos
ராகுல், பிரியங்கா காந்தி

காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி திங்கள்கிழமை காஷ்மீரின் பனிப்பொழிவில் பனிக் கட்டிகளை எறிந்து விளையாடிய தருணத்தைப் பகிர்ந்து கொண்டனர். அந்த புகைப்படத்தில், ஸ்ரீநகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் அண்ணன்- தங்கை இருவரும் பனிக்கட்டிகளை மேலே எறிந்து அன்பாக சண்டையில் ஈடுபடுவதைக் காண முடிகிறது.

ஸ்ரீநகரில் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனிப்பந்து மேலே போட்டு அண்ணன் தங்கை அன்பு சண்டை

ராகுல் காந்தி தனது 4,000 கி.மீ பாரத் ஜோடோ யாத்திரையை ஞாயிற்றுக்கிழமை முடித்துக் கொண்டதையடுத்து, காங்கிரஸ் கட்சி நிறைவு விழா நிகழ்ச்சிக்கு தயாராகி வருகிறது. ஷேர்-இ-காஷ்மீர் ஸ்டேடியத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு பொதுக் கூட்டத்தை நடத்த உள்ளது. இதில் பல எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீநகரில் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனிப்பந்து மேலே போட்டு அண்ணன் தங்கை அன்பு சண்டை

திங்கள்கிழமை காலை, ஸ்ரீநகரில் உள்ள செஷ்மா ஷாஹியில் உள்ள யாத்ரா முகாமில் ராகுல் காந்தி மூவர்ணக் கொடியை ஏற்றினார். இதையடுத்து, ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்காவுடன் மவுலானா ஆசாத் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அங்கு யாத்திரைக்கான நினைவிடமும் வைக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை காலை ஸ்ரீநகரில் பனிப்பொழிவு தொடர்ந்து கொண்டிருந்ததால், ராகுல் காந்தி வழக்கமாக அணியும் வெள்ளை டி-ஷர்ட்டின் மீது அரை ஜாக்கெட் அணிந்திருந்தார்.

பாரத் ஜோடோ யாத்திரை செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி 5 மாதங்களில் 12 மாநிலங்கள் வழியாக 4,000 கி.மீ பயணம் செய்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Rahul gandhi and priyanka gandhi share a playful moment in kashmirs snow

Best of Express