காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை புதன்கிழமை (டிச.27) ஹரியானாவில் சந்தித்துப் பேசினார்.
பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு நீதிக் கோரி பஜரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பவதாக கூறிய 2 நாள்களுக்குள் ராகுல் காந்தி அவரை சந்தித்துள்ளார்.
முன்னதாக மல்யுத்த புதிய குழுவை மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை (டிச.24) தற்காலிகமாக நிறுத்தியது. இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பஜ்ரங் புனியா, “அவர் எங்கள் நடைமுறைகளைப் பார்த்தார், மேலும் சில நகர்வுகளைக் கற்றுக்கொடுக்கும்படி என்னிடம் கேட்டார். முதலில், நான் அவருக்கு சில எளிதான ரோல்களைக் காட்டினேன். இருப்பினும், நான் அவருக்கு கடினமான ஒன்றை கற்பிக்கிறேன் என்று அவர் வலியுறுத்தினார். எனவே, தோபி பச்சாத் மற்றும் தாக் போன்ற நகர்வுகளுக்கு நகர்ந்தோம். அவரது கிரகிக்கும் சக்தி வலுவாக இருந்தது” என்றார்.
65 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்ற புனியா தனது ஆரம்ப ஆண்டுகளை சாராவில் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Rahul Gandhi-Bajrang Punia idea exchange: Dhobi pachaad meets jiu-jitsu moves at Haryana’s famous akhada
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“