ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாரத் ஜோடோ யாத்திரையில் மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி பங்கேற்ற மேடையில் தேசிய கீதத்துக்கு பதில் வேறு பாடல் ஒலித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவில் ராகுல் காந்தியின், பாரத் ஜோடோ யாத்திரையின் போது, மேடையில் ஒல பெருக்கியில் தேசிய கீதத்துக்கு பதிலாக தவறுதலாக நேபாள தேசிய கீதம் ஒலித்த வீடியோ சமூக ஊடங்களில் வெளியானது. ராகுல் காந்தியின் மேடையில், தேசிய கீதத்துக்கு பதிலாக வேறு பாடல் ஒலித்த வீடியோவைக்குறிப்பிட்டு பா.ஜ.க-வினர் விமர்சனமும் கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள்.
மகாராஷ்டிராவில் பாரத் ஜோடா யாத்திரையின்போது ராகுல் காந்தி பங்கேற்ற மேடை நிகழ்ச்சியில், தேசிய கீதம் இசைக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகிறார். ஆனால், தவறுதலாக வேறு ஒரு மொழி பாடல் ஒலிக்கிறது. பின்னர், தவறுதலாக நேபாள தேசிய கீதம் ஒலிக்கப்பட்டதாக தெரியவந்தது.
ஆனால், ராகுல் காந்தி கேட்டது ராஷ்டிர கான் அல்லது தேசிய கீதம் (தேசிய பாடல் வந்தே மாதரம்) என்றும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்த வீடியோவில், ராகுல் காந்தி மைக்கில், இப்போது ராஷ்டிர கீதம் (தேசிய கீதம் இசைக்கப்படும் என்று அறிவிக்கிறார். இதையடுத்து, மேடையில் உள்ள அனைவரும் கவனத்துடன் நிற்கிறார்கள்.
ஆனால், தெரியாத வேறு ஏதோ ஒரு பாடல் ஒலிக்கத் தொடங்கும் போது, ராகுல் காந்தி ஆச்சரியமடைந்து, காங்கிரஸ் தலைவரைப் பார்த்து சைகை செய்கிறார். அவர் ஒலிபெருக்கியில் பாடலை ஒலிபரப்பு செய்யும் நபரை அழைக்கிறார்.
இறுதியாக, தேசிய கீதம் முடிந்தது. ஆனால், யாரோ நீண்ட, ஐந்து சரணங்கள் கொண்ட பாடலைத் தேர்ந்தெடுத்தனர்.
அந்த பாடலின் முதல் சரணத்திற்குப் பிறகு பாடல் முடிந்துவிட்டதாக நினைத்து, ஒரு தலைவர் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்போதே ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று முழக்கமிட ஆரம்பித்தார். பாடல் நிறுத்தப்பட்டு, பாடல் நிறுத்தப்பட்டு, முழக்கங்கள் தொடர்ந்து ஒலித்தன.
பா.ஜ.க தலைவர்கள் பலர் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கேலி கிண்டல் செய்தும் அல்லது அவர் தேசிய கீதத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டிவருகின்றனர்.
தமிழக பா.ஜ.க தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, “ராகுல் காந்தி, என்ன இது?” என்ற கேள்வியுடன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
தமிழகத்தின் கன்னியாகுமரியில் செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, 12 மாநிலங்கள் பயணம் மேற்கொண்டு வரும் நவம்பர் 20-ம் தேதி மத்தியப் பிரதேசத்திற்கு உள்ளே செல்கிறது. பாரத் ஜோடா யாத்திரை ஜம்மு-காஷ்மீரில் நிறைவடைகிறது. குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த யாத்திரையை இடையில் நிறுத்த உள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.