Advertisment

ராகுல் யாத்திரை முடிந்ததும் பிரியங்கா; எல்லா மாநிலங்களிலும் களம் இறங்க திட்டம்

பீகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங், பங்கா மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மந்தர் மலைப் பகுதியிலிருந்து புத்த கயா வரை 1,250 கி.மீ., மாநிலம் தழுவிய பேரணியை வியாழக்கிழமை மேற்கொண்டார். மேற்கு வங்கத்தில், காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரியும் நடை பயணம் செல்கிறார்.

author-image
WebDesk
New Update
ராகுல் யாத்திரை முடிந்ததும் பிரியங்கா; எல்லா மாநிலங்களிலும் களம் இறங்க திட்டம்

பீகார் காங்கிரஸ் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட அகிலேஷ் பிரசாத் சிங், பங்கா மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மந்தர் மலைப் பகுதியிலிருந்து புத்த கயா வரை 1,250 கி.மீ., மாநிலம் தழுவிய பேரணியை வியாழக்கிழமை மேற்கொண்டார். அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில், காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரியும் நடை பயணம் செல்கிறார். மாநிலம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட கிமீ நடைப்பயணத்தை நடத்துகிறார். சில நாட்களுக்கு முன்பு கங்காசாகரின் தெற்கு முனையிலிருந்து தொடங்கி டார்ஜிலிங் வரை நடை பயணம் செல்கிறார்.

Advertisment

அஸ்ஸாம் கிழக்குப் பகுதியில், மேற்கு வங்கம்-அஸ்ஸாம் எல்லையில் உள்ள துப்ரி மாவட்டத்தில் உள்ள கோலக்கஞ்ச் முதல் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சதியா வரை, மாநிலம் முழுவதும் 835 கி.மீ.க்கு மேல் ஒரு கடினமான அணிவகுப்பை காங்கிரஸ் தலைவர் பூபென் குமார் போரா சில நாட்களுக்கு முன்பு முடித்தார். இதேபோன்ற, யாத்திரை ஒடிசாவிலும் நடந்து வருகிறது. ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் திரிபுரா சட்டமன்றத் தேர்தலுக்கு உட்பட்ட மாநில பிரிவுகளும் பல சிறிய யாத்திரைகளை ஏற்பாடு செய்துள்ளன.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பேரணி கடந்து செல்லாத மாநிலங்களில் உள்ள காங்கிரஸின் பிரிவுகள், தலைமையின் வழிகாட்டுதலின்படி, மாநிலம் தழுவிய பேரணிகளை நடத்தி வருகின்றன. பாரத் ஜோடோ யாத்திரையின் தொடர்ச்சியாக, ஜனவரி 26 முதல் இரண்டு மாத கால ‘ஹாத் சே ஹாத் ஜோடோ (கை கோர்ப்போம்)’ பிரச்சாரத்தையும் காங்கிரஸ் கட்சி இறுதி செய்துள்ளது. பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா அதில் முக்கிய பங்கு வகிக்கிறார். இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக, அனைத்து கிராம பஞ்சாயத்துகள் மற்றும் வாக்குச் சாவடிகளை உள்ளடக்கிய, தொகுதி அளவில் நடை பயணம் நடைபெறும். இந்த யாத்திரை குறித்து ராகுல் காந்தியின் கடிதம் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையாக விநியோகிக்கப்படும். இந்த யாத்திரையில், ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்கள் பேரணியை பிரியங்கா காந்தி இவத்ரா வழிநடத்துகிறார்.

பாரத் ஜோடோ யாத்ராவைப் போலவே, யாத்திரைகளை திட்டமிட்டிருக்கும் இந்த தலைவர்கள் கடுமையான தேர்தல் போட்டி நெருக்கடியில் வெற்றியைத் தேடுகிறார்கள்.

1990 முதல் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திலும், 1993 முதல் திரிபுராவிலும், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஒடிசாவிலும் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. மேற்கு வங்கத்தில் நிலைமை இன்னும் மோசம். அங்கே காங்கிரஸ் கட்சியின் கடைசி முதல்வர் சித்தார்த்த ஷங்கர் ரே, 1972 முதல் 1977 வரை ஆட்சியில் இருந்தார். ஜார்கண்ட் 2000-ம் ஆண்டில் உருவானதில் இருந்து ஒரு காங்கிரஸ் முதலமைச்சர் கூட வரவில்லை.

காங்கிரஸின் பெரும்பாலான மாநில பிரிவுகளில் கோஷ்டி பூசல் அதிகமாக உள்ளது .இது கட்சிக்கு மற்றொரு பெரிய சவாலாக உள்ளது.

மிகவும் கடினமான பணியை கொண்ட தலைவர்களில் பீகாரில் உள்ள அகிலேஷ் சிங் ஒருவர். காங்கிரஸால் இங்கு தேர்தலில் தனித்து போட்டியிடுவதை இனி கனவு காண முடியாது. மேலும் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணியில் மோசமான மூன்றாவது கூட்டணி கட்சியாக உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே யாத்திரையை துவக்கி வைக்க வருவதால், அகிலேஷ் சிங்கிற்கு அதிக நம்பிக்கை உள்ளது. அதோடு கட்சி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அதன் ஒரே மக்களவை எம்.பி (கிஷன்கஞ் தொகுதி) உள்ளிட்ட தலைவர்கள் இந்த யாத்திரையில் பங்கேற்பார்கள்.

டிசம்பரில் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட அகிலேஷ் சிங், பீகார் யாத்திரை உள்ளூர் பிரச்சினைகளையும் முன்னிலைப்படுத்தும் என்று கூறுகிறார். இருப்பினும், காங்கிரஸ் மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் ஒரு அங்கமாக இருப்பதால் அது கேள்விக்குறியாகவும் உள்ளது.

“நிச்சயமாக, நாங்கள் உள்ளூர் பிரச்சினைகளை எழுப்புவோம். மற்றபடி, இந்த யாத்திரைக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. 1990-க்கு முன்பு இருந்ததைப் போல காங்கிரஸை மீண்டும் உயிர்ப்பிப்பதே முக்கிய குறிக்கோள். நாங்கள் கூட்டணியை ஆதரிக்கிறோம். ஆனால், அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க வேண்டும்.” என்று ராஜ்யசபா எம்.பி-யான சிங் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

நிதிஷ் குமார் அரசாங்கத்தின் ஒவ்வொரு அசைவையும் காங்கிரஸ் கவனிக்கவில்லை என்று அவர் கூறினார். “ஹூச் சோகம் நடந்தபோது, நாங்கள் 5 பேர் கொண்ட குழுவை அனுப்பினோம். இழப்பீடு கோரினோம். எனவே உள்ளூர் பிரச்சனைகள் முக்கியத்துவம் பெறும்.” என்று சிங் கூறினார்.

அமைப்பு ரீதியாக, மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு இதே நிலைதான் உள்ளது, அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு உள்ள தேசிய அங்கீகாரம் (அவர் மக்களவையில் காங்கிரஸின் தலைவராகவும் இருக்கிறார்) அளிக்கப்பட்டுள்ளது. இவர் போராட்ட குணம் கொண்டவர். இவர் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக முழு பலத்துடன் கட்சியை கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“ஊழல், சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் (பிரதமர்) மோடியுடனான மம்தாவின் மறைமுகமான புரிதல் உள்ளிட்ட பிரச்சினைகளை நாங்கள் எழுப்புகிறோம். மம்தா மோடி இருவரும் அமைதியாக இருக்கிறார்கள். இருவருக்கும் இடையே ஒரு புரிதல் உருவாகிறது. இந்த பிரச்சினைகள் அனைத்தையும் நாங்கள் பேசுகிறோம்” என்று சவுத்ரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையைப் போல், மாநிலத்தி நடை பயணம் செய்பவர்கள் தங்குவதற்கு கன்டெய்னர்கள் இல்லை. தலைவர்கள் முக்கிய உள்ளூர் தலைவர்களின் வீடுகளிலோ அல்லது மாவட்ட தலைமையகத்தில் உள்ள ஓட்டல்களிலோ தங்குவார்கள். சிக்கல்கள், பிரச்சனைகள் இருந்தபோதிலும், மாநில யாத்திரைக்கான வரவேற்பு இதுவரை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகிறார். “ராகுல் காந்தியைப் போல் கூட்டத்தை இழுப்பவர் எங்களிடம் இல்லை. எங்கள் அமைப்பும் பலவீனமாக உள்ளது. எங்களிடம் வளங்களும் இல்லை. ஆனால், மக்கள் குவிகிறார்கள். சில சிவில் சமூக மக்களும் சேர்ந்துள்ளனர்” ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கூறினார்.

அஸ்ஸாமில், 2021-ல் தொடர்ந்து இரண்டாவது சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும், அமைப்புரீதியாக காங்கிரஸ் மிகவும் நல்ல நிலையில் உள்ளது. அஸ்ஸாம் மாநில யாத்திரை நவம்பர் 1-ம் தேதி தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி 15 மாவட்டங்கள், ஒன்பது மக்களவைத் தொகுதிகள் மற்றும் 51 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி செல்கிறது.

லோக்சபா எம்.பி பிரத்யுத் போர்தோலாய் கூறுகையில், “மக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியினர் மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.” என்று கூறினார்.

அஸ்ஸாம் காங்கிரஸில் உள்ள கோஷ்டி பூசல் பற்றிய செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும் அவர் கூறினார். “தலைவர்கள் இருக்கிறார்கள், நிச்சயமாக, அவர்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர். எல்லா இடங்களிலும் இப்படித்தான். ஆனால், அஸ்ஸாமில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் பாருங்கள்” என்று கூறினார்.

திரிபுரா, ஜார்க்கண்ட் மற்றும் உ.பி-யில் காங்கிரஸ் தலைவர்கள் மற்ற மாநிலங்களைப் போல மாநிலத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு நடக்கவில்லை. “நாங்கள் 17 அணிகளாகப் பிரிந்து, ஒவ்வொரு அணியும், ஒரு மூத்த தலைவர் தலைமையில், மூன்று நான்கு சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1,700 கி.மீ. நடை பயணம் மேற்கொள்கிறோம். எனவே, நாங்கள் 10 நாட்களுக்குள் மொத்த சட்டமன்றத் தொகுதிகளிலும் செல்கிறோம்”என்று திரிபுராவின் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய் குமார் கூறுகிறார்.

ஜார்கண்ட் மாநிலமும் இதேபோன்ற நடைமுறையைக் கொண்டுள்ளது. “மாவட்டம், சட்டமன்றத் தொகுதி மற்றும் தொகுதி அளவில் யாத்திரைகளை நடத்தினோம். யாத்திரைகள் மேற்கொண்ட 25 அமைப்பு மாவட்டங்களுக்கும் சென்றேன். நாங்கள் செப்டம்பரில் நடைமுறையைத் தொடங்கினோம். இன்னும் சில தொகுதிகளில் யாத்திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் கூறுகிறார்.

இந்த யாத்திரை பாரத் ஜோடோ யாத்ரா போல இல்லை. எங்களுக்கு, ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட யாத்திரைக்கு என ஒரு வழி இல்லை என்று அவர் வாதிடுகிறார். அப்படி சென்றால், எல்லா பகுதி மக்களையும் நாங்கள் இணைத்து செல்ல முடியாது. ஜார்க்கண்ட் நிலப்பரப்பு வேறுபட்டது… குறைவான மக்கள்தொகை கொண்டது” என்று தாக்கூர் சுட்டிக்காட்டுகிறார்.

பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் காரணத்தால், இது தாக்கூருக்கும் ஒரு சவாலாக இருந்தது. “ஒவ்வொரு மாவட்டத்திலும் யாத்திரை முடிவடையும் பொதுக்கூட்டத்தில் உள்ளூர் தலைவர்களை பேச அனுமதித்தோம். அதனால், உள்ளூர் பிரச்னைகளும் எழுப்பப்பட்டன. ஆனால், மோடி அரசின் தவறான ஆட்சியைப் பற்றிப் பேசினோம். ஜே.எம்.எம்-காங்கிரஸ் அரசாங்கத்தின் சாதனைகளை எடுத்துக்காட்டினோம்” என்று தாக்கூர் கூறினார்.

பெரும்பாலான தலைவர்கள் இந்த யாத்திரைகள் கட்சியை உற்சாகப்படுத்தியதாக நம்புகிறார்கள். “கட்சியின் அமைப்பு செயல்பாடுகள் நடந்துள்ளது. இவை அனைத்தும் கட்சியின் தேர்தல் மறுமலர்ச்சிக்கு வழிவகுக்குமா என்பது, நாம் வேகத்தைத் தக்கவைக்க முடியுமா என்பதைப் பொறுத்தது. அது முற்றிலும் அமைப்பு மற்றும் மாநில அளவிலான தலைவர்களைப் பொறுத்தது,” என்று ஒரு மூத்த தலைவர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Rahul Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment