happy birthday rahul : காங்கிரசின் உட்சபட்ச நம்பிக்கை.. வாழ்த்து மழையில் நனையும் ராகுல் காந்தி!

ராகுலுக்கு எப்போது திருமணம் ?

ராகுலுக்கு எப்போது திருமணம் ?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rahul gandhi birthday

rahul gandhi birthday

happy birthday rahul : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இன்று 49 ஆவது பிறந்த நாள். ஒட்டு மொத்த காங்கிரசின் உட்சபட்ச நம்பிக்கையாக திகழும் ராகுல் காந்திக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். முயற்சியின் நாயகன் என புகழப்படும் ராகுலுக்கு எதிர்கட்சி தலைவர்களும் வாழ்த்து சொல்ல மறக்கவில்லை.

Advertisment

2017 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி என அழைக்கப்பட்டவர், அவரின் தாயா சோனியா காந்தியின் உடல்நிலை குறைவு காரணமாக 2018 ஆம் ஆண்டு காங்கிரசின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற நாளிலிருந்து கட்சிக்காக முழு வீச்சில் பாடுப்பட்ட ராகுல் காந்தி சந்திக்காத சர்ச்சை, கிண்டல்கள், ஏளன பேச்சுகளே இல்லை. இவை எல்லாவற்றையும் கடந்து தனி ஒருவனாக காங்கிரஸ் கட்சியை தனது தோளில் சுமந்துக் கொண்டு நி்ற்கிறார் ராகுல்.

நடந்து முடிந்த நாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றி பெறும் என அதிக நம்பிக்கை வைத்திருந்தார் ராகுல். அதற்காக அவர் எடுத்த முயற்சிகளில் அவரின் தங்கை ப்ரியங்கா காந்தியை அரசியல் களத்தில் இறக்கியது. ஆனால் முடிவோ எதிர்மறையாக அமைந்தது. இதுவரை காங்கிரசின் கோட்டையாக பார்க்கப்பட்ட பல மாநிலங்கள் காங்கிரஸ் கைவிட்டு நழுவின. இருந்த போதும் மனம் தளராத ராகுல் தேர்தல் முடிவு அன்றே செய்தியாளர்களை சந்தித்து மக்கள் முடிவை ஏற்றுக்கொள்கிறோம்.

publive-image

Advertisment
Advertisements

வெற்றி பெற்ற பாஜகவுக்கு நன்றி என்றார். இதுப்போன்ற முதிர்ச்சியான அரசியல் போக்கு ராகுல் காந்திக்கு எப்படி இவ்வளவு சிறிய வயதிலேயே வந்தது என்பது தான் பலரின் ஆச்சரியமும். ராகுலுக்கு எதிரி என்றால் அவர்கள் வெளியில் இல்லை. கட்சிக்கு உள்ளே தான். ராகுல் காந்திக்கு அனுபவம் போதவில்லை. அவரை காங்கிரஸ் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது என்று மூத்த தலைவர்கள் சிலர் உட்கட்சி பூசல்களை செய்து வருகின்றனர். இருந்த போதும் பெரும்பாலனவர்களின் ஆதரவு ராகுல் பக்கமே.

இவை எல்லாவற்றிருக்கும் மத்தியிலும் காங்கிரஸ் கட்சி அதிகம் உற்று நோக்கி இருப்பது ராகுல் திருமணம் குறித்து தான். நீண்ட் காலமாக பேட்ச்லராக வாழ்ந்து வரும் ராகுலுக்கு எப்போது திருமண? என்பது தான் பலரின் கேள்வியும். இந்த வருடத்திலாவது இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமான என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.

publive-image

இன்று பிறந்த நாள் கொண்டாடும் ராகுல் காந்திக்கு குவிந்த வாழ்த்துக்களை இங்கே காணுங்கள்.

பிரதமர் மோடி:

பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ பிறந்த தினத்தை முன்னிட்டு ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் ஆசிர்வதிக்கட்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

மு. க ஸ்டாலின்:

Sonia Gandhi Rahul Gandhi All India Congress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: