சிலைகள் உடைப்புக்கு ஊக்கமளிக்கிறது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிலைகள் சேதப்படுத்தப்படுவதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆங்காங்கே இடதுசாரி தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல், புதிகோட்டை மாவட்டம் ஆலங்குடியின் விடுதி கிராமத்தில் நேற்றிரவு மர்ம நபர்களால் பெரியார் சிலையில் இருந்து தலை உடைக்கப்பட்டது. இச்சம்பவத்திற்குத் தமிழக கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டார். இதில், திரிபுராவில் புரட்சியாளர் லெனின் சிலை தகர்க்கப்பட்டதை பாஜக மற்றும் […]

இந்தியாவில் சிலைகள் சேதப்படுத்தப்படுவதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆங்காங்கே இடதுசாரி தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல், புதிகோட்டை மாவட்டம் ஆலங்குடியின் விடுதி கிராமத்தில் நேற்றிரவு மர்ம நபர்களால் பெரியார் சிலையில் இருந்து தலை உடைக்கப்பட்டது. இச்சம்பவத்திற்குத் தமிழக கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டார்.

இதில், திரிபுராவில் புரட்சியாளர் லெனின் சிலை தகர்க்கப்பட்டதை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஊக்கப்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும்,  பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை எதிர்த்து தலித் மக்களுக்காக போராடிய சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியார் சிலையும் இன்று உடைக்கப்பட்டுள்ளது என ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rahul gandhi blames bjp and rss for statue vandalization

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express