ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகனா? விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்

15 நாட்களில் பதில் அளிக்க காங்கிரஸ் தலைவருக்கு உத்தரவு

Rahul Gandhi British Citizenship Controversy : உள்துறை விவகார அமைச்சரகம் ராகுல் காந்திக்கு விளக்கக் கடிதம் கேட்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் ராகுல் காந்தியின் குடியுரிமை பற்றி, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மூத்த பாஜக தலைவருமான சுப்ரமணிய சுவாமியின் கேள்விக்கு பதில் அளிக்குமாறு குறிப்பிட்டுள்ளது.

சுப்ரமணிய சுவாமி அளித்த புகாரில், இங்கிலாந்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றின் இயக்குநர்களில் ஒருவராக ராகுல் காந்தியின் பெயர் இடம் பெற்றிருப்பதாகவும், அதில் அவர் இங்கிலாந்தின் குடிமகன் என்று குறிப்பிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த தகவல்கள், அந்த நாட்டில் 2005 மற்றும் 2006ம் ஆண்டு வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட படிவத்தில் இடம் பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்த கேள்விகளுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் நோட்டீஸ்

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில் “உலகத்திற்கே தெரியும் ராகுல் காந்தி இந்திய பிரஜை என்பது. மோடியிடம் வேலையில்லா திண்டாட்டம் குறித்த கேள்விகளுக்கு பதில் இல்லை, விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்த கேள்விகளுக்கு பதில் இல்லை. கறுப்புப் பணம் குறித்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. அதனால் தான் முக்கியமான பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் வகையில் புதிது புதிதாக பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன.

Rahul Gandhi British Citizenship Controversy

இது குறித்து ராஜ்நாத் சிங்கிடம் கேட்ட போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் விளக்கம் வேண்டி அமைச்சரவைக்கு கடிதங்கள் எழுதுவது வழக்கத்தில் இருக்கும் ஒன்று தான். அதே போல் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதும் வழக்கத்தில் இருக்கும் ஒன்று தான் என்று கூறினார்.

கடந்த மாதம், அமேதியில் சுயேச்சையாக நிற்கும் வேட்பாளர் துருவ் லால் இதே போன்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து, ராகுலின் வேட்புமனு தாக்கலில் அவருடைய படிப்பு மற்றும் குடியுரிமை தொடர்பாக அளிக்கப்பட்ட தகவல்கள் தவறாக உள்ளன என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : ரஃபேல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை தவறாக பயன்படுத்தியதற்கு வருந்திய ராகுல் !

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close