சத்தியமே என் கடவுள், அதை அடைய அகிம்சை வழி; நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு ராகுல் ட்வீட்
நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தது என்று ராகுல் காந்தியின் வழக்கறிஞர் பாபு மங்குகியா கூறினார்.
’மோடி குடும்பப் பெயர்’ தொடர்பான அவதூறு வழக்கில் வியாழனன்று குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இந்நிலையில், மகாத்மா காந்தியின் சத்தியம் மற்றும் அகிம்சை குறித்து ராகுல் ட்வீட்டில் மேற்கோள் காட்டியுள்ளார்.
Advertisment
“எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. சத்தியமே என் கடவுள், அதை அடைய அகிம்சை வழி. - மகாத்மா காந்தி," என நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு ராகுல் காந்தி, இந்தியில் ஒரு ட்வீட்டில் கூறினார்.
2019 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக கர்நாடகாவில் நடந்த தேர்தல் பேரணியின் போது ராகுல் காந்தியின் ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்த அவதூறு வழக்கில் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தது என்று ராகுல் காந்தியின் வழக்கறிஞர் பாபு மங்குகியா கூறினார்.
குற்றவியல் அவதூறு தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 499 மற்றும் 500 பிரிவுகளின் கீழ் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது, என்று மங்குகியா கூறினார்.
தீர்ப்பை அறிவிக்கும் போது ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இருந்தார்.
ஏப்ரல் 13, 2019 அன்று கர்நாடகாவில் மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது கோலாரில் நடந்த பேரணியில் பேசிய, எல்லா திருடர்களுக்கும் எப்படி மோடி என்று பொதுவான குடும்பப் பெயராக வைத்திருக்கிறார்கள்? என்று விமர்சித்தார்.
இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏவும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி அளித்த புகாரின் பேரில் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“