இந்தத் தீர்ப்புக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, எம்பி ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள பா.ஜ.க., காங்கிரஸ் தலைவரின் கருத்துக்களால் அக்கட்சி பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
2019-ம் ஆண்டு தொடரப்பட்ட குற்றவியல் அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, அவருடை மோடி குடும்பப்பெயர் குறித்த கருத்துக்களுக்காக, அக்கட்சி அடக்குமுறைக்கு அடிபணியாது என்று கூறியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா பதிவிட்டுள்ள ட்வீட்டில், “பயமுறுத்தும் அதிகாரத்தின் முழு இயந்திரமும், அபாதரம் விதிப்பது, தண்டனை, பாகுபாடுகளை திணிப்பதன் மூலம் ராகுல் காந்தியின் குரலை நசுக்க முயற்சி செய்கிறது என்று கூறினார். “என் சகோதரர் ஒருபோதும் பயந்ததில்லை, பயப்பட மாட்டார். உண்மையைப் பேசி வாழ்பவர், உண்மையைப் பேசுவார், நாட்டு மக்களின் குரலை தொடர்ந்து எழுப்புவோம்” என்று கூறினார்.
ராகுல் காந்தி, மகாத்மா காந்தி கூறியதை மேற்கோள் காட்டி “எனது மதம் உண்மையையும் அகிம்சையையும் அடிப்படையாகக் கொண்டது” என்றார். "உண்மையே என் கடவுள், அகிம்சையே அதை அடைவதற்கான வழி” என்று ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களுக்குப் பிறகு, நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது. நீதிமன்ற உத்தரவை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தது, காங்கிரஸ் தலைவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று கூறியது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் இந்த தீர்ப்புக்கு எதிராக கடுமையாக பதிலளித்தனர்.
இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறிய மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜ.க-வை கடுமையாக சாடினார். அவர் ட்விட்டரில், “ஒரு விரலை மற்றவர்களை நோக்கி நீட்டினால் நான்கு விரல்கள் அவர்களை நோக்கியும் நீட்டி இருக்கும்” என்று அவர் ட்விட்டரில் கூறினார்.
ராகுல் காந்தியை ஆதரித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இது எதிர்க்கட்சிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சதி என்று குற்றம் சாட்டினார். இதுகுறித்து கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், “எங்களுக்கு காங்கிரஸுடன் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், இது போன்ற அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை சிக்க வைப்பது சரியல்ல… பொது மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க வேண்டும். நாங்கள் நீதிமன்றத்தை மதிக்கிறோம். ஆனால், தீர்ப்பில் உடன்படவில்லை.” என்று கூறினார்.
சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, “ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகம், நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். எதிர்க்கட்சி தலைவர்களை இடைவிடாமல் குறிவைப்பது கண்டனத்திற்குரியது, இது மக்களுக்காக பேசும் குரல்களை, அரசாங்கத்தை கேள்வி கேட்கும் குரல்களை அமைதிப்படுத்தாது” என்று கூறினார்.
உண்மையைப் பேசியதற்காகவும், சர்வாதிகாரிக்கு எதிராக குரல் எழுப்பியதற்காகவும் ராகுல் காந்தி தண்டிக்கப்படுகிறார் என்று காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் கூறினார். மேலும், அவர் “அநீதிக்கு எதிராக குரல் எழுப்பினால், இ.டி-சி.பி.ஐ, போலீஸ், வழக்கு என அனைவர் மீதும் பாய்கிறது” என்று கூறினார்.
ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்பி ராகவ் சதா கூறுகையில், எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தின் அடிப்படையாகும், கருத்து வேறுபாடுகளை ஒடுக்கக்கூடாது. “ராகுல் காந்திக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பில் மரியாதையுடன் உடன்படவில்லை. எதிர்க்கட்சியே ஜனநாயகத்தின் அடிப்படை. கருத்து வேறுபாடுகளை அடக்கக் கூடாது. இந்தியா ஒரு வலுவான விமர்சன பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இதை ஒரே சித்தாந்தம், ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற கண்ணோட்டத்தில் குறைப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது, ஜனநாயக விரோதமானது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
இதற்கிடையில், காங்கிரஸைத் தாக்கிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தியின் கருத்து காங்கிரஸுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார். “ராகுல் காந்தி என்ன சொன்னாலும் அது தீங்கு விளைவிக்கும். அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தேசத்திற்கு நல்லதல்ல,” என்று கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் கூறினார், என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குஜராத்தின் முன்னாள் அமைச்சரும், சூரத் மேற்கு பா.ஜ.க எம்.எல்.ஏ-வுமான பூர்ணேஷ் மோடி தாக்கல் செய்த வழக்கு, ஏப்ரல் 13, 2019-ல் கர்நாடகாவின் கோலாரில் நடந்த மக்களவைத் தேர்தல் பேரணியில், “நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களும் மோடி என ஏன் பெயர் வைத்திருக்கிறார்கள்?” என்று பேசினார்.
இந்த உத்தரவை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச் எச் வர்மா பிறப்பித்தார். வியாழக்கிழமை பிற்பகல் பல தேசிய மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி நீதிமன்ற அறைக்குள் இருந்தார். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சூரத் போலீசார் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.