“மிகப்பெரிய பங்குச் சந்தை ஊழலில்” ஈடுபட்டதாகக் கூறி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பலர் மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை வலியுறுத்தினார். சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கும் சமீபத்திய கருத்துக் கணிப்புகளுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
ஆங்கிலத்தில் படிக்க:
ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, "போலி" கருத்துக்கணிப்புகளுக்குப் பிறகு பங்குச் சந்தைகள் உயர்ந்து, பின்னர் ஜூன் 4 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்ட நாளில் செயலிழந்தன. சில்லறை முதலீட்டாளர்கள் ரூ. 30 லட்சம் கோடி இழந்தனர், இது "மிகப்பெரிய பங்குச் சந்தை ஊழல்," என்று கூறினார்.
முதல்முறையாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பங்குச் சந்தை குறித்து கருத்து தெரிவித்ததை நாம் பார்த்தோம்.
பங்குச் சந்தை “ஊழல்” தொடர்பான மூன்று கேள்விகளையும் ராகுல் காந்தி முன் வைத்தார். பிரதமர் மோடியும் அமித் ஷாவும் “நாட்டு மக்களுக்கு சந்தையில் முதலீடு செய்ய அறிவுறுத்தியது ஏன்” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
"செபி விசாரணை நடத்தும் அதானி சேனல்களுக்கு மட்டும்" பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் நேர்காணல்கள் அளித்தது ஏன் என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். "அத்தகைய சூழ்நிலையில், அந்த சேனல்களின் பங்கு என்ன?" என்று ராகுல் காந்தி கேட்டார்.
கடைசியாக, பா.ஜ.க.,வுக்கும், “போலி” கருத்துக் கணிப்புகளுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து ராகுல் காந்தி சந்தேகம் தெரிவித்தார்.
"பா.ஜ.க.,வின் உயர்மட்ட தலைவர்கள் இந்த பங்குச் சந்தை ஊழலைச் செய்தனர்" என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“