Advertisment

அமித்ஷா அவதூறு வழக்கு: ராகுலுக்கு ரூ.1,000 அபராதம் விதித்த ஐகோர்ட்

பிடியாணைக்கு எதிரான இந்த வழக்கில், குறிப்பிட்ட காலத்திறகுள் விளக்க மனு தாக்கல் செய்யாததால் ராகுல் காந்திக்கு ரூ.1000 அபராதமாக விதித்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Rahul Gandhi fined by Jharkhand HC in Amit Shah Defamation case Tamil News

மார்ச் 20 அன்று, உயர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டிற்கு ஒரு மாத காலம் தடை விதித்தது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Rahul Gandhi | Amit Shah: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது கடந்த 2018 ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. பா.ஜ.க-வின் பிரதாப் கட்டியார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "கொலைக் குற்றச்சாட்டுகள்" கொண்ட நபர்கள் பா.ஜ.க தலைவர் ஆகலாம் என்றும், இது பா.ஜ.க தொண்டர்களை அவமதிப்பதாகவும், அதற்கு நஷ்டஈடாக ரூ.10 கோடி ராகுல் காந்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். 

Advertisment

இந்த வழக்கை ஜார்கண்ட் எம்.பி-எம்.எல்.ஏ-களுக்கான சாயிபாசா சிறப்பு நீதிமன்றம் விசாரித்த நிலையில், வழக்கில் பிப்ரவரி 2024 இல், ராகுல் காந்திக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தது. 

இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனிப்பட்ட விலக்கு கோரிய ராகுல் காந்தியின் கோரிக்கை மார்ச் 14, 2024 அன்று நிராகரிக்கப்பட்டது. மேலும் அவர் மார்ச் 27 அன்று ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. 

இதன் பின்னர், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காந்தி ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மார்ச் 20 அன்று, உயர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டிற்கு ஒரு மாத காலம் தடை விதித்தது, ஏப்ரல் 25 அன்று, எம்.பி-எம்.எல்.ஏ நீதிமன்றத்தால் தொடங்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், பிடியாணைக்கு எதிரான இந்த வழக்கில், குறிப்பிட்ட காலத்திறகுள் விளக்க மனு தாக்கல் செய்யாததால் ராகுல் காந்திக்கு ரூ.1000 அபராதமாக விதித்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமித் ஷாவை அவதூறாகப் பேசியதாகக் கூறி ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்கத் தவறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ரூ.1,000 அபராதம் விதித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Amit Shah Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment