காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் லோக்சபா உறுப்பினர் பதவி அவருக்கு மீண்டும் வழங்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, 12, துக்ளக் லேன் பங்களா மீண்டும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
'மோடி குடும்பப்பெயர்' கருத்துக்கள் தொடர்பாக ராகுல் காந்தியின் மீதான அவதூறு குற்றம் நிரூபிக்கப்பட்டதன் விளைவாக மார்ச் 24 அன்று மக்களவை உறுப்பினராக தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அவர் காலி செய்யச் சொல்லப்பட்ட அதே பங்களாவை மீண்டும் ஒதுக்க லோக்சபாவின் ஹவுஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது.
இதையும் படியுங்கள்: மணிப்பூர் பெண்கள் அதிகளவில் பாதிப்பு; பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்: தொல். திருமாவளவன்
ராகுல் காந்தியிடம் 12, துக்ளக் லேன் பங்களா ஒதுக்கப்பட்டது குறித்து கேட்டபோது ”முழு நாடும் எனது வீடு” என்று ஜாலியாக கூறினார்.
திங்களன்று, அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மீதான தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததை அடுத்து, மக்களவைச் செயலகம் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை மீண்டும் வழங்கியது.
கிரிமினல் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தின் தண்டனையைத் தொடர்ந்து மார்ச் மாதம் எம்.பி.யாக தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, ஏப்ரல் மாதம், ராகுல் காந்தி மத்திய டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை நெறிமுறையின்படி காலி செய்தார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கு அரசு தங்குமிட உரிமை இல்லை மற்றும் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்ய ஒரு மாத கால அவகாசம் பெறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil