Rahul Gandhi gets notice from NCW : ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழலில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து அறிவித்து வந்தது. மேலும், சிபிஐ விசாரணை மற்றும் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது.
மேகதாது அணை, ரஃபேல் போர் விமானம், முத்தலாக் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணக் கோரி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர் எதிர்கட்சியினர்.
Rahul Gandhi gets notice from NCW
ரபேல் போர் விமானம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போது, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மலுப்பலான பதில்களை கூறி வந்தார்.
அப்போது ராகுல் காந்தி, நரேந்திர மோடி எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதில் அனுப்ப இயலாமல் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று கடுமையான கடுமையான கருத்தினை முன்வைத்தார்.
புதன்கிழமை ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் நரேந்திர மோடி, ரபேல் ஊழலில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள ஒரு பெண்ணின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று மீண்டும் கூறியுள்ளார்.
இது தேசிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. தற்போது இந்த சர்ச்சைக்குரிய வாக்கு வாதத்தை முன் வைத்த ராகுல் காந்தி மீது தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா கூறியுள்ளார்.
ஒரு அரசியல்வாதியாக இருக்கும் ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரான இப்படி ஒரு கருத்தினை வைப்பது அவருடைய இயல்பினை காட்டுகிறது என்று கூறியுள்ளார் ரேகா.
மேலும் படிக்க : ‘அதிமுக பின்னால் ஒளியும் ராணுவ அமைச்சர்; அறையில் ஒளியும் பிரதமர்’ – மக்களவையில் ராகுல் காரசார விவாதம்