/tamil-ie/media/media_files/uploads/2022/09/New-Project43.jpg)
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை (இந்திய ஒற்றுமை யாத்திரை) தொடங்கி மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொள்கிறார். இந்த யாத்திரையை கன்னியாகுமரியில் கடந்த செப்.7 ஆம் தேதி தொடங்கினார். தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 4 நாள் யாத்திரை மேற்கொண்டார். நேற்று (செப்.11) தமிழக பயணத்தை
நிறைவு செய்து, கேரளா சென்றடைந்தார். கேரளாவில் பயணத்தை தொடங்கினார். கேரளாவில் 19 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் தமிழக பயணம் குறித்து அக்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாரத் ஜோடோ யாத்திரை தமிழக பயணம் சிறப்பாக அமைந்ததாக கூறியுள்ளனர். அதேவேளையில் தமிழகத்தில் காங்கிரஸிற்கு 9 எம்பிக்கள் உள்ள நிலையில் அந்த மாவட்டங்களையும், கூடுதலான இடங்களிலும் பயணத்திற்கலாம் என சிலர் கூறுகின்றனர்.
மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், "செப்டம்பர் 7ஆம் தேதி யாத்திரை தொடங்கியது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக சிறப்பான வரவேற்பு கிடைத்ததில் கட்சி மகிழ்ச்சி அடைந்துள்ளது. பல இடங்களில் பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. பாதுகாவலர்கள் இருந்தாலும், பயணத்தின் போது ராகுல் எளிதாக அணுகக்கூடியவராக இருந்தார். குழந்தைகள், பொதுமக்கள் என அனைவரையும் சந்தித்தார்.
திட்டமிடப்பட்ட கூட்டங்கள் மற்றும் பார்வையாளர்களைத் தவிர, ராகுல் பலரை சந்தித்து பேசினார். யாத்திரையின் முதல் நாள் பொதுக்கூட்டத்தில் 40,000 பேர் கலந்து கொண்டனர். இது நாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட அதிகம். மாநில காவல்துறை நன்கு ஒத்துழைப்பு அளித்தனர்" என்று கூறினார்.
மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், இன்னும் சில மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பலர் கூறுகின்றனர். ராகுல் மற்ற மாவட்டங்கள் செல்ல முடியவில்லை என்றாலும் தங்கள் எம்.பி.க்கள் இருக்கும் மாவட்டங்களுக்கு சிறிய தூரம் பயணம் மேற்கொண்டிருக்கலாம் எனப் பலர் கூறுகின்றனர் என்றார்.
ராகுலை சந்தித்த சமூக ஆர்வலர்கள்
காங்கிரஸுன் சில முடிவுகளை எதிர்த்து விமர்சனம் செய்தாலும் சென்னையைச் சேர்ந்த தலித் ஆர்வலர் ஷாலின் மரியா லாரன்ஸ் ராகுலை சந்தித்து பேசினார். சமூக ஊடகங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர். ராகுலுடனான சந்திப்பு குறித்து பேசுகையில், "காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பஞ்சாயத்து ராஜ், வேலை உறுதித் திட்டங்கள் போன்றவை மகிழ்ச்சியாக இருந்தாலும் உபா, கூடங்குளம் போன்றவைகள் ஏற்றுக் கொள்ள முடியாது.
தலித் பெண்ணாக இந்த இடத்தைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரஸ் கட்சியில் இப்படி ஒரு இடத்தைப் பெறுவது நினைத்துப் பார்க்க முடியவில்லை என்றார். ராகுல் மிக எளிமையாக அணுகக் கூடியவராக இருந்தார். நாங்கள் அவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் என்று சொன்னேன். தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து பேசும்போது நான் அழுதேன். அவர் உடனே என்னிடம் அழுகக் கூடாது" என்று கூறினார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்பி உதயகுமார் மற்றும் அவரது நண்பர்கள், பூவுலகின் நண்பர் சுந்தர் ராஜன் ஆகியோர் காந்தியை சந்திக்க கன்னியாகுமரிக்கு அழைக்கப்பட்டனர்.
கூடங்குளம் பிரச்சினையை காந்தி முன் எழுப்ப வேண்டாம் என்றும், அது காங்கிரஸ் தலைவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் முதலில் தன்னிடம் கூறியதாக உதயகுமார் கூறினார். “நான் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொன்னேன். பிறகு ராகுலுடனான சந்திப்பின் போது இதைப் பற்றி பேசுவேன் என்று கூறினேன். ராகுலுடன் இதைப் பற்றி தெரிவித்த போது விரிவாக கேட்டறிந்தார். கேள்விகள் மற்றும் சந்தேகங்களை எழுப்பி கேட்டார் என்று தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த கிட்டு கிருஷ்ணமூர்த்தி, மீனவர் நலச் சங்கத்தைச் சேர்ந்த பீட்டர் மில்டன், சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர் அருள் ஆறுமுகம், முருகம்மாள், வெள்ளங்கிரி மலைகள் பழங்குடியினர் பாதுகாப்பு சங்கம் மற்றும் டிசம்பர் 3 இயக்கத்தின் பேராசிரியர் டிஎன்எம் தீபக் (மாற்றுத்திறனாளிகள் இயக்கம்), சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் ஆகியோர் ராகுலை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டவர்கள்.
நித்யானந்த் ஜெயராமன் கூறுகையில், "யாத்திரை மூலம் மக்களைச் சென்றடைவதில் ராகுல் நேர்மையான முயற்சியை மேற்கொள்கிறார். காங்கிரஸ் கட்சியைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ராகுலின் பொது தொடர்புகளில் ஒரு நிலைத்தன்மையை என்னால் பார்க்க முடிகிறது. அவர் நம்பிக்கையுடனும் ஜனநாயகத்துடனும் இருக்கிறார். எதிலும் ஆழமாக சிந்தித்து கவனித்து செயல்படுபவர். இந்த காலத்தில் பல அரசியல்வாதிகளிடம் அரிதாக தென்படுகிறது குணம்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.