Advertisment

மோடியும் பா.ஜ.க-வும் மட்டுமே இந்து சமூகம் அல்ல; ராகுல் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்திய அமித்ஷா

“தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வன்முறையைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்” என்ற எதிர்கட்சித் தலைவரின் கருத்துகள் சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

author-image
WebDesk
New Update
Rahul Gandhi 1
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

18வது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி-யுமான ராகுல் காந்தியின் முதல் உரைக்கு பா.ஜ.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது. ராகுல் காந்தி எதிர்க்கட்சி வரிசையில் உள்ள உறுப்பினர்களுக்கு சைகை செய்து,  “தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறையைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்” என்று கூறியபோது அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Rahul Gandhi's 'Hinduism' remark triggers uproar in Lok Sabha; Amit Shah demands apology

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசிய ராகுல் காந்தி, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாதது குறித்தும் நீட் மீதான முறைகேடு புகார்கள் குறித்தும் மத்திய அரசை கடுமையாகச் சாடினார்.

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா இடைவேளைக்கு பின் சபை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியதை அடுத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி-யுமான ராகுல் காந்தி, தனது பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் 'நண்பர்கள்' என்று கூறி 'இந்தியாவின் யோசனை' என்ற தலைப்பில் தனது உரையைத் தொடங்கினார். சிவபெருமான் ஒருவரில் தொடங்கி, யாருக்கும் அஞ்ச வேண்டாம் என்ற வாசகத்தைப் பற்றிப் பேசினார். காங்கிரஸ் கட்சியின் சின்னமான ‘கை’ சின்னம் குறித்து பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி எப்படி தம்மைப் பார்த்து வாழ்த்தவோ அல்லது சபையில் புன்னகைக்கவோ இல்லை என்று ராகுல் காந்தி பேசினார்.  “இன்று காலை, ராஜ்நாத் சிங் என்னை நன்றாக வாழ்த்தினார், ஆனால், பிரதமர் மோடி அருகில் இருக்கும்போது அது நின்றுவிடும்.” என்று கூறினார். 

அப்போது குறுக்கிட்டுப் பேசிய பிரதமர் மோடி,  “எதிர்க்கட்சித் தலைவரை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள அரசியல் சட்டம் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது” என்று கூறினார்.

“தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வன்முறையைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்”  என்ற எதிர்கட்சித் தலைவரின் கருத்துகள் சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கு,  “அனைத்து இந்துக்களையும் வன்முறையாளர்களாக சித்தரித்ததற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று மக்களவையில் அமித்ஷா கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ஒரு மதத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். 

இதற்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்த, ராகுல் காந்தி, “மோடியும் பா.ஜ.க-வும் மட்டுமே முழு இந்து சமூகம் அல்ல.” என்று கூறினார்.

தொடர்ந்து, லோக்சபாவில் பேசிய ராகுல் காந்தி, தனது மைக் அணைக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.  “மைக்குகளை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?” என்று கேட்டார். அப்போது மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, தலைவர் பதவியின் நோக்கத்தின் மீது அவதூறாக பேசியதற்காக ராகுல் காந்தியை சீண்டினார். அவரது மைக் ஒருபோதும் அனைக்கப்படவில்லை என்று கூறினார்.

அனைத்து மதங்களும் தைரியத்தைப் பற்றி பேசுகின்றன, இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம், ஜைனம் மற்றும் சீக்கியம் ஆகியவற்றை மேற்கோள்காட்டி அச்சமின்மையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இந்தியாவின் அடிப்படைக் கருத்துக்கள் மீது பாஜக திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, ஆளும் கட்சி முன்மொழிந்த யோசனைகளை மில்லியன் கணக்கான மக்கள் எதிர்த்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.  “பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் நான் தாக்கப்பட்டேன். 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் (எனக்கு எதிராக), (எனது) வீடு எடுத்துச் செல்லப்பட்டது, அமலாக்கத்துறை 55 மணிநேரம் விசாரணை நடத்தியது” என்று அவர் கூறினார்.

ராகுல் காந்தி தனது உரையில், சிவபெருமானின் படத்தைக் காட்டினார், இது சபாநாயகர் ஓம் பிர்லாவை, சபையில் பிளக்ஸ் பேனர்களைக் காட்டுவதற்கு விதிகள் அனுமதிக்காது என்பதை நினைவூட்டத் தூண்டியது.

இஸ்லாம் மற்றும் சீக்கியம் உட்பட அனைத்து மதங்களும் தைரியத்தையும் அச்சமின்றி இருப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றன என்று ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தினார்.

மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி அரசு வந்ததும் ‘அக்னிவீர் திட்டம்’ ரத்து செய்யப்படும் என்றார்.

முன்னதாக, நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மக்களவையில் ஒரு நாள் தனி விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் அரசிடம் தெளிவான உத்தரவாதம் கேட்டு, வெளிநடப்பு செய்தனர். குடியரசுத் தலைவர் திரௌபடி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முடிவடையும் வரை தனி விவாதம் நடத்த முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதை அடுத்து வெளிநடப்பு செய்யப்பட்டது.  

எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து அரசாங்கம் விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படுவதைக் கண்டித்து பல இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

ராஜ்யசபாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சி வெறும் டிரெய்லர் என்றும், 'படம் அபி பாக்கி ஹை' என்றும் கூறியதற்கு,  மூன்றாவது முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், தேர்வு வினாத்தாள் கசிவு, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள், ரயில் விபத்து, விமான நிலைய கட்டிடம் சரிவு, சுரங்கப் பாலங்கள் மற்றும் சுங்க வரி உயர்வு ஆகியவைப் பற்றிப் பேசினர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் கல்வி முறை குறித்து கார்கே கூறிய கருத்துக்கள் நீக்கப்படும் என ராஜ்ய சபா சபாநாயகர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment