ராகுல் காந்தி ஜெர்மனி சுற்றுப்பயணம் : ஜெர்மனி நாட்டில் இருக்கும் ஹாம்பர்க் பகுதியில் உள்ள புசேரியஸ் சம்மர் ஸ்கூலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
Advertisment
அவர் அங்கு பேசுகையில் இந்தியாவின் சாமானியர்களின் வாழ்வினைக் கேள்விக்குறியாக மாற்றிய ஜிஎஸ்டி, வேலையில்லாத் திண்டாட்டம், பணமதிப்பிழக்க நீக்கம் ஆகியவற்றைப் பற்றி அங்கு பேசியுள்ளார்.
வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி ராகுல் காந்தியின் கருத்து
பணமதிப்பிழக்கம் பற்றி பேசிய ராகுல் , சிறு குறுந்தொழிலாளர்களின் வாழ்வாதரத்தையும், பணப்புழக்கத்தையும் முற்றிலும் ஒழித்துவிட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இந்திய அரசு அதோடு நின்றுவிடாமல் ஜிஎஸ்டி வரியையும் விதித்து ஆயிரக்கணக்கான தொழில்மையங்களை முடக்கி வைத்துவிட்டது என்று குறிப்பிட்டார். இதனால் தான் வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகி வருகிறது என்றும் பேசியிருக்கிறார்.
வேலையில்லா திண்டாட்டம் பற்றி தன்னுடைய கருத்தினை பதிவு செய்த ராகுல் காந்தி, அமெரிக்கா - ஈராக் போர் காலக்கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினற்கு வேலை வாய்ப்பினை மறுத்துவிட்டது ஈராக். இதன் விளைவாக வேறு வழியின்று தீவிரவாத இயக்கங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். இது போன்ற காரணங்களின் விளைவாகவே ஐஎஸ்ஐஎஸ் போன்ற பெரிய தீவிரவாத இயக்கங்கள் தோன்றுவதற்கு வழிவகையாக அமைந்தது.
ராகுல் காந்தி சுற்றுப்பயணம்
இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தியின் பயணத்தில் ஜெர்மனியில் இவர் நடத்திய உரையாடல் முக்கிய பங்கு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியில் இருக்கும் ராகுல் இரண்டு முக்கியமான நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார். கடல் கடந்து இருக்கும் காங்கிரஸ் கட்சி பற்றி பெர்லினில் பேச இருக்கிறார். மேலும் ஜெர்மனி நாட்டின் அதிபர் ஏஞ்சலா மார்க்கெலை சந்திக்க இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏஞ்சலாவினை சந்தித்த பிறகு இங்கிலாந்து செல்ல இருக்கிறார் ராகுல்.
ஹாம்பர்க்கில் வன்முறை, தன்னுடைய தந்தை மற்றும் பாட்டியின் மரணம், வெறுப்பு, இன்றைய தலித் மற்றும் பழங்குடி இனமக்களின் நிலை, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடனான இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் பேசியிருக்கிறார்.