பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, வெள்ளிக்கிழமை முடிவடைந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை புறக்கணித்தார்.
17ஆவது லோக்சபாவில், காங்கிரஸ் தலைவரின் நாடாளுமன்ற வருகை 53 சதவீதமாக உள்ளது. டிசம்பர் 21 வரை தொகுக்கப்பட்ட பிஆர்எஸ் தரவுகளின்படி, இது எம்.பி.க்களின் வருகையின் தேசிய சராசரியான 79 சதவீதத்திற்கும் குறைவாகும். காந்தி கேரளாவின் வயநாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். கேரளாவைச் சேர்ந்த மற்ற எம்.பி.க்களின் சராசரி வருகை 84 சதவீதமாக உள்ளது.
ராகுல் காந்தி, 17ஆவது மக்களவையில் ஐந்து விவாதங்களில் பங்கேற்றார். தேசிய சராசரி 39.7 ஆகவும், மாநில சராசரி 66.1 ஆகவும் உள்ளது. மேலும் ராகுல் காந்தி 86 கேள்விகளை முன்வைத்துள்ளார்.
16வது லோக்சபாவிலும் காங்கிரஸ் தலைவரின் எண்ணிக்கை இதேபோல் இருந்தது
2014-19 காலங்களில் உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதியை பிரதிநிதித்துவப்படுத்திய காந்தியின் வருகை 52 சதவீதமாகவும், தேசிய சராசரி 80 சதவீதமாகவும், மாநில சராசரி 86 சதவீதமாகவும் இருந்தது.
அவர் 14 விவாதங்களில் பங்கேற்றார். அதன் தேசிய சராசரி 67.1 ஆகவும், மாநில சராசரி 109.6 ஆகவும் இருந்தது. 2009 மற்றும் 2014 க்கு இடையில், 15வது மக்களவையின் போது, காந்தி அமேதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஐந்தாண்டுகளில் அவரது வருகை 43 சதவீதம். தேசிய சராசரி 76 சதவீதமாக இருந்தது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வருகை 79 சதவீதமாக இருந்தது. இரண்டு விவாதங்களில் கலந்து கொண்டார். தேசிய சராசரி 37.9 ஆகவும், மாநில சராசரி 43.9 ஆகவும் இருந்தது.
மக்களவையில், தேசிய மற்றும் மாநில சராசரிகள் முறையே 300 மற்றும் 254 கேள்விகள் ஆக காணப்பட்டது. பிப்ரவரி 2015 இல், நரேந்திர மோடியும் பாஜகவும் ஆட்சிக்கு வந்த சில மாதங்களுக்குப் பிறகு, "சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் கட்சியின் எதிர்காலப் போக்கைப் பற்றி சிந்திக்க சிறிது நேரம் வேண்டும்" என்று ராகுல் தனது தாயார் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் கேட்டார். இது பட்ஜெட் கூட்டத்தொடருடன் ஒத்துப்போனது.
ராகுல் நாடாளுமன்றத்துக்கு வராததால் காங்கிரஸை பாஜக குறிவைத்தது. பாஜக தலைவர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “நாட்டு மக்கள் ஏற்கனவே காங்கிரஸை நீண்ட விடுப்பில் அனுப்பிவிட்டனர்” என்றார்.
பாஜக எம்பி அனுராக் தாக்கூர் கூறுகையில், கடந்த பத்தாண்டுகளாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர்கள் இல்லாததால் மக்களவையில் காங்கிரஸ் 44 இடங்களாக குறைந்துள்ளது என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/