/indian-express-tamil/media/media_files/Y8CkOQcuHGPGhyhh0Tqb.jpg)
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உடன் ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக்.
Rahul Gandhi interviews Satya Pal Malik : புல்வாமா தாக்குதல், விவசாயிகள் போராட்டம், கெளதம் அதானி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக்கைப் பேட்டி காணும் புதிய வீடியோவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை (அக்.25) வெளியிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு கடைசியாக ஆளுநராக இருந்த மாலிக், புல்வாமா தாக்குதலை ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசியல் ரீதியாகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டினார்.
அப்போது, சிஆர்பிஎஃப் வீரர்கள் ஐந்து விமானங்களைக் கேட்டதாகவும், அதை உள்துறை அமைச்சகம் நிராகரித்ததாகவும் மாலிக் குற்றம் சாட்டினார்.
2019 பிப்ரவரியில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமதுவின் தற்கொலை படை பயங்கரவாதி வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை அவர்களின் பேருந்து மீது மோதியதில் மொத்தம் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில், பிரதமர் மோடி மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருவரும் இந்த விவகாரத்தைப் பற்றி பேசுவதைத் தவிர்க்குமாறு தன்னிடம் கூறியதாக முன்னாள் ஜே & கே கவர்னர் சத்யபால் மாலிக் கூறினார்.
தொடர்ந்து, "இது தவிர, சிஆர்பிஎஃப் பஸ் மீது மோதிய வாகனம் சம்பவத்திற்கு 10 நாள்களுக்கு முன்பு அங்கு சுற்றித் திரிந்தது. அதில் வெடிபொருட்கள் நிறைந்திருந்தன” என்றார்.
இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரை படை அல்லது ராணுவத்தால் நிர்வகிக்க முடியாது என்றும் மாலிக் கூறினார். அங்குள்ள மக்களை வெல்வதன் மூலம் எதையும் செய்ய முடியும் என்றார்
மாலிக் மணிப்பூரில் நடந்து வரும் இனக்கலவரம் அரசின் தோல்வியை குறிக்கிறது என்றார். அப்போது, “முதலமைச்சரால் அங்கு செல்ல முடியாது; அவரால் எதுவும் செய்ய முடியாது. ஆனாலும், அவர் நீக்கப்படவில்லை,'' என்றார்.
புல்வாமா சம்பவத்தைத் தவிர, விவசாயிகள் போராட்டம் குறித்தும் பேசிய மாலிக், விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வாக குறைந்தபட்ச ஆதரவு விலையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், “அதானி பெரிய குடோன்களைக் கட்டி பயிர்களை நிர்ணயித்த விலைக்கு வாங்கினார். அடுத்த ஆண்டு, அவற்றின் விலை அதிகரிக்கும். அவர் அதை அதிக விலைக்கு விற்பார்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.