Advertisment

ராகுல் காந்தி நடைபயணம்.. ஆனால் வேண்டிய தூரத்தை கடக்கிறாரா? குஜராத், ஹிமாச்சல் தேர்தல் பின்னணி

குஜராத், ஹிமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை அம்மாநில அரசியலில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

author-image
WebDesk
Oct 11, 2022 09:54 IST
New Update
ராகுல் காந்தி நடைபயணம்.. ஆனால் வேண்டிய தூரத்தை கடக்கிறாரா?  குஜராத், ஹிமாச்சல் தேர்தல் பின்னணி

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை (இந்திய ஒற்றுமை பயணம்) மேற்கொண்டு வருகிறார். தற்போது கர்நாடகாவில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுலுக்கு செல்லும் வழியெங்கும் தொண்டர்கள், மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். கர்நாடகாவில் ராகுல் 21 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். அடுத்தாண்டு கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், அங்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக பணி செய்து வருகின்றனர். தேர்தல் வியூகமாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுலுடன் யாத்திரை மேற்கொண்டார்.

Advertisment

2024 நாடாளுமன்றத் தேர்தல், மக்களிடத்தில் காங்கிரஸை மீண்டும் கொண்டு செல்ல, பாஜக மோடி அரசின் தோல்வி, வெறுப்பு அரசியலுக்கு எதிரான குரல் எனப் பல வியூகங்களுடன் காங்கிரஸ் யாத்திரையை முன்னெடுத்துள்ளது.

யாத்திரையின் போது ராகுல், மக்களை சந்தித்து பேசுகிறார். சமூக ஆர்வலர்களை சந்திக்கிறார். செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார். யாத்திரையின் போது ராகுலில் நெகிழ்ச்சி செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படுகிறது. தொண்டர்கள், மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். ராகுலின் யாத்திரை வெற்றி பெறுவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் ஜனநாயகத்தில் ராகுலின் பயணம்

யாத்திரை மற்றும் அதன் முக்கிய முழக்கங்கள் - வெறுப்பு மற்றும் பிரிவினைக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைக்க வேண்டிய அவசியம். வேலைவாய்ப்பு வழங்குவதில் மோடி அரசின் தோல்வி, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த இயலாமை ஆகும். இந்தநிலையில் ராகுலின் யாத்திரை குஜராத், ஹிமாச்சலப் பிரதேசத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. காரணம் இம்மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் எம்மாதிரியான பிரச்சாரங்களை முன்வைக்க உள்ளது, ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் செயல்பாடுகள் என கவனமாக பார்க்கப்படுகிறது. இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கிட்டத்திட்ட செயலிழந்து விட்டதாக கூறுப்படுகிறது.

இந்தநிலையில் பிரதமர் மோடி குஜராத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கடந்த வாரம் ஹிமாச்சலப் பிரதேசம் சென்று அவர், இந்த வார இறுதியில் மீண்டும் ஹிமாச்சலப் பிரதேசம் சென்று வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தேர்தல் ஆணையம் விரைவில் இவ்விரு மாநிலங்களுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னதாக மோடி இங்கு செல்கிறார். ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் பல பயணங்களை மேற்கொண்டு பாஜகவிற்கு எதிராக கடுமையான விமர்சங்களை முன்வைத்து வருகிறார்.

குஜராத் மாநிலத்தின் தேர்தல் பார்வையாளராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை காங்கிரஸ் நியமித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் 3 நாட்கள் மாநிலத்திற்கு சென்று வந்தார், மற்றும் செப்டம்பர் முதல் வாரத்தில் அகமதாபாத்தில் ராகுலுடன் இருந்தார். காங்கிரஸ் கட்சி அங்கு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம், விவசாய கடன் தள்ளுபடி, 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள், கோவிட் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

மறுபுறம் ஹிமாச்சல் காங்கிரஸில் குழப்பம் இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லாவுக்கு எதிராக அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் குஜராத் கேடாவில் நடந்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்கள் போலீஸ்காரர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் ராகுல் மௌனம் காப்பது ஏன்? என கேள்வி எழுந்துள்ளது. வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலுக்கு எதிராகப் பேசும்போது இவ்விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பபடுகிறது. சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற சம்பவங்களில் மௌனமாக இருப்பது அரசியல் ரீதியாக செயல்படுவதன் நோக்கம் என பலர் கூறுகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல், ராகுல் யாத்திரை எனப் பலவும் மும்முரமாக நடந்து வருகிறது. குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை அரசியலில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். குஜராத் மற்றும் ஹிமாச்சலில் காங்கிரஸ் வெற்றி பெறுமா? காங்கிரஸ் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்தால்? அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? யாத்திரையின் பலன் எவ்வாறு இருக்கும்? எனப் பல கேள்விகள் எழுப்பபட்டு வருகிறது. வரும் நாட்களில் காங்கிரஸின் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment