காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அல்லது வேறு எந்த வெளிநாடுகளும் தலையிட அனுமதிக்கக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டுவிட்டர் பதிவு இட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது. மத்திய அரசுடன் பல்வேறு விவகாரங்களில் நாங்கள் எதிர்ப்பட்டு இருக்கலாம். ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் தெளிவாக இருக்கிறோம். காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அல்லது வேறு எந்த வெளிநாடுகளும் தலையிட அனுமதிக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் நிகழும் வன்முறை சம்பவங்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து மறைமுக ஆதரவு தெரிவித்து வருகிறது. பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத இயக்கங்களே, காஷ்மீரில் வன்முறை சம்பவங்களை கட்டவிழ்த்து வருகிறது. சர்வதேச அளவில், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக பாகிஸ்தான் திகழ்ந்து வருவதாக ராகுல் அதில் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் மனுவில் ராகுல் பெயர்?
காஷ்மீர் விவகாரத்தை, பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அப்போது பாகிஸ்தான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பாகிஸ்தான் குறித்து ராகுல் காந்தி தவறான தகவல்களை அளித்து வருவதாக அதில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் ரன்தீப் சிங் சூரஜ்வாலா தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு தனியாக செல்ல தயார் - ராகுல்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயல்புநிலை திரும்பிவிட்டது. கவர்னர் சத்யபால் மாலிக்கின் அழைப்பின் பேரிலேயே, ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய குழு, கடந்த சனிக்கிழமை காஷ்மீர் சென்றது. ஆனால், அவர்களை போலீசார் ஸ்ரீநகர் விமானநிலையத்திலேயே தடுத்து நிறுத்தி டில்லிக்கு திருப்பி அனுப்பினர்.
டில்லி திரும்பிய பின் பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் கூறியதாவது, காஷ்மீரில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை. பல இடங்களில் 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. இதை முன்னரே தமக்கு தெரிவித்து இருந்தால், தான் காஷ்மீருக்கு தனியாக சென்றிருப்பேன் என்று ராகுல் கூறினார்.