ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த வழக்கில் ராகுல் காந்தி இன்று ஆஜர் ஆவார் என தகவல்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று காலை 11 மணி அளவில் மும்பை பிவண்டி கோர்ட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேரில் ஆஜராவார் என தகவல்.

கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி மராட்டிய சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். இதனால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டர் ஒருவர் தானே மாவட்டம் பிவண்டி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

பிவண்டி நீதிமன்றத்தில் இந்த வழக்கு 2 முறை விசாரணைக்கு வந்தது. முதலில் ஏப்ரல் 23ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை. பின்னர் 2வது முறையாக மே 2ம் தேதி வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டபோதும் அவர் ஆஜராகவில்லை. 2018ம் ஆண்டின் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள காரணத்தால் அவரால் ஆஜராக இயலவில்லை என அவரது வழிக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஜூன் 12-ந் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என பிவண்டி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று காலை 11 மணி அளவில் பிவண்டி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜர் ஆவார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் கோரேகாவ் பகுதியில் உள்ள கண்காட்சி மையத்தில் நடக்கும் கட்சிக்கூட்டத்தில் கலந்து கொள்ள ராகுல்காந்தி இன்று மும்பைக்கு வருகை தரவிருக்கிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close