Advertisment

2024 பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு ஆச்சரியம் காத்திருக்கு: ராகுல் காந்தி

அஸ்ஸாமின் பிரதிடின் மீடியா நெட்வொர்க் ஏற்பாடு செய்த மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, “மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில், தெலங்கானாவில் சாத்தியமான வெற்றி கிடைக்கும்” என்றார்.

author-image
WebDesk
New Update
Rahul Gandhi on womens reservation bill

அஸ்ஸாமின் பிரதிடின் மீடியா நெட்வொர்க் நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

Rahul Gandhi on Bhiduris remarks : நாடாளுமன்றத்தில் எம்பி ரமேஷ் பிதுரியின் கருத்துக்களும், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற யோசனையும் ஆளுங்கட்சியின் திசைதிருப்பும் யுத்திகள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

அஸ்ஸாமின் பிரதிடின் மீடியா நெட்வொர்க் ஏற்பாடு செய்த மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, “மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில், தெலங்கானாவில் சாத்தியமான வெற்றி கிடைக்கும்” என்றார்.

Advertisment

தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் எம்.பி.க்கு எதிரான பேச்சு, ஒரே நாடு ஒரே தேர்தல், நாட்டின் பெயரை மாற்றுவோம் இதெல்லாம் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் காலத்தில் மக்களை திசை திருப்பும் யுக்திகள். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகின்றன; 2024 பொதுத்தேர்தலில் அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது.” என்றார்.

மேலும், “எதிர்க்கட்சிகள் தாங்கள் இணைந்து செயல்படுகிறோம்” என்றார். கர்நாடக தேர்தல் குறித்த பேசுகையில், “கர்நாடகாவில் நாங்கள் என்ன செய்தோம், மாநிலத்திற்கான தெளிவான பார்வையை நாங்கள் வழங்கினோம்” என்றார்.

‘BJP in for a surprise in 2024’: Rahul Gandhi on Bhiduri’s remarks, ‘controlling the narrative’, and women’s reservation bill

இதற்கிடையில், அதானி விவகாரம் குறித்து பைனான்சியல் டைம்ஸ் போன்ற செய்தித்தாள்களில் வெளியாகும் செய்திகளில் இருந்து திசைதிருப்ப சிறப்பு அமர்வை அரசாங்கம் கொண்டு வந்தது என்றும் அவர் கூறினார்.

மேலும் சாதி வாரி கணக்கெடுப்பு விவகாரம் குறித்து பேசுகையில், “ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது இந்திய மக்கள் விரும்பும் அடிப்படை விஷயம் என்று அவர்களுக்குத் தெரியும், அந்த விவாதத்தை அவர்கள் விரும்பவில்லை” என்றார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து பேசுகையில், “பெண்கள் இடஒதுக்கீட்டிற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் அல்லது பெண்கள் இடஒதுக்கீடுக்கும் எல்லை நிர்ணயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மசோதாவின் பலனை பெண்கள் பெறுவார்கள் என்று அரசாங்கம் கூறுகிறது, ஆனால் காங்கிரஸ் இப்போது அதை விரும்புகிறது என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment