Rahul Gandhi on Rafale deal : ரபேல் பேர ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் குற்றங்கள் முன்வைக்கப்பட்டு வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் தி ஹிந்து நாளிதழ் வெளியிட்ட செய்தியை மையமாக வைத்து, இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
Advertisment
பிரதமரின் நேரடி தலையீடு இருந்தது உறுதியானது - ராகுல் காந்தி
அந்த கட்டுரையில் ரபேல் ஒப்பந்தத்தின் போது, பாதுகாப்புத்துறை அமைச்சகம் எடுத்த முடிவில் பிரதமர் அலுவலகத்தின் தலையீடு மிகவும் அதிகமாக இருந்தது என்று குறிப்பிடப்பட்டிந்தது.
கடந்த நவம்பர் 24, 2015 அன்று வெளியான அந்த தகவலில், பேர ஒப்பந்தத்தில் பாதுகாப்புத்துறை மற்றும் பேர ஒப்பந்தக் குழு மிகவும் பலவீனமாகிவிட்டது என்று பாதுகாப்புத்துறை செயலாளர் அறிக்கை ஒன்றை, அன்றைய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக செயலாற்றிய மனோகர் பரிக்கரிடம் அளித்திருக்கிறார்.
செப்டம்பர் மாதம் 27, 2016 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழானது “இந்த போர ஒப்பந்தத்தில் நிறைய கேள்விகளையும் எதிர் தரப்பு வாதங்களையும் முன் வைத்தது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம்” என்று வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மேற்கொண்டு பேசிய ராகுல் காந்தி “ரபேல் பேர ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகத்தின் தலையீடு இருப்பது திட்டவட்டமாகிவிட்டது. 30,000 கோடியை திருடிச் சென்று தன்னுடைய நண்பர் அனில் அம்பானியிடம் கொடுத்துவிட்டார் மோடி” என்று பகிரங்க குற்றச்சாட்டினை ராகுல் காந்தி இன்று வைத்தார்.