ரஃபேல் ஆவணங்கள் திருட்டு : அனைத்தையும் மறைப்பது தான் இந்த அரசின் முக்கிய பணி- ராகுல் காந்தி

மோடி மீது தவறில்லை என்றால் அவர் ஏன் விசாரணைக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும்.

By: Updated: April 22, 2019, 03:13:35 PM

Rahul Gandhi on stolen Rafale documents : உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் ”ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து திருடு போனது” என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு குறித்து பல்வேறு தரப்பில் இருந்து கேள்விகளும், விமர்சனங்களும், கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Rahul Gandhi on stolen Rafale documents

அதே வரிசையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தன்னுடைய கேள்வியினை எழுப்பியுள்ளார். இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த அரசானது அனைத்தையும் காணாமல் செய்யும் அரசாகும்.

எப்படி 2 கோடி இளைஞர்களுக்கான வேலை காணாமல் போனதோ, எப்படி விளைபொருள்களுக்கு ஏற்ற விலை காணாமல் போனதோ, எப்படி ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் 15 லட்சம் என்ற வாக்குறுதி காணாமல் போனதோ அப்படியே ரஃபேல் பேரம் தொடர்பான ஆவணங்களும் காணாமல் போனது.

ஏற்கனவே இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஊடகம் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்த நிலையிலும், ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை. இந்தியாவில் பிரச்சனை என்னவென்றால், பிரதமருக்கு எதிராக யார் குற்றம் சுமத்துகின்றார்களோ அவர்கள் மீது தான் விசாரணையே  நடக்கின்றது.

டிசம்பர் 14ம் தேதி அறிவிக்கப்பட்ட ரபேல் தீர்ப்பின் மறு சீராய்வு மனுக்களை விசாரிக்க வேண்டிய நிலையில் உச்ச நீதிமன்றம் உள்ள போது, ஆவணங்கள் திருடப்பட்டது தொடர்பான விபரங்கள் வெளியாகின்றன. இந்நிலையில் மத்திய அரசு, திருடப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக கொண்டு செய்தி வெளியிட்ட நிறுவனங்கள் மீது அதிகாரப்பூர்வ ரகசியங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டி பேசினார் அவர்.

மோடி மீது தவறில்லை என்றால் அவர் ஏன் விசாரணைக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும். கூட்டு பாராளுமன்ற கமிட்டியின் உருவாக்கத்திற்கு ஏன் மறுப்பு கூற வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி.

மேலும் படிக்க : ரஃபேல் ஆவணங்கள் திருட்டு… என்ன சொல்கிறார் என்.ராம் ?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Rahul gandhi on stolen rafale documents govts job make things disappear

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X