முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடமான வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பைலட்டாக இருந்து , குடும்பத்தாரின் வற்புற்தலால் அரசியல் ஈடுப்பட்டவர் தான் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி. 1981 பிப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப்பிரதேசத்திலுள்ள அமேதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்றார்.
இந்தியாவில் மிகச் சிறிய வயதில் பிரதமர் ஆன முதல் தலைவர் என்ற பெருமையை பெற்றவர் இவர் ஒருவரே. கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு இன்றுடன் 27 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்நிலையில், இன்று (21.5.18) அவரது நினைவு நாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று காலை வீர பூமிக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரின் தாயார் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
,
அவர்களைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள் பலரும் மலர் தூவி அஞ்சலிசெலுத்தினர்.
,