/tamil-ie/media/media_files/uploads/2019/10/a32.jpg)
Rahul Gandhi plays cricket with Haryana students after chopper makes emergency landing - இளமை திரும்புதே... சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக அவசர அவசரமாக இன்று ரேவரியில் தரையிறங்கியது. கால தாமதத்தின் போது மாணவர்களுடன் ராகுல் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு நிமிட வீடியோவில், காங்கிரஸ் தலைவர் பேட்டிங் செய்வதைக் காண முடிந்தது. தனது தாயார் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பதிலாக தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிறகு, ஹரியானாவின் மகேந்திரகரில் இருந்து ராகுல் டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது மோசமான வானிலை நிலவியது.
இதனால், ரேவாரியின் கே.எல்.பி கல்லூரியில் பாதுகாப்பாக இறங்கிய பின்னர், ராகுல் சாலை வழியாக டெல்லிக்குச் சென்றார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.