பாஜகவில் இருக்கும் ஒரே தைரியமான ஆள் நீங்கள் தான்... கட்கரியை பாராட்டிய ராகுல் காந்தி...

.ரஃபேல் பேர ஒப்பந்தம், விவசாயிகளின் நிலைமை பற்றியும் பேசுங்கள் என வேண்டுகோள்

Rahul Gandhi praises Nitin Gadkari : மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஞாயிறு அன்று நாக்பூரில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் தொண்டர்களிடம் பேசிய அவர் “பாஜகவினர் தங்களின் குடும்பத்தை பார்க்க வேண்டும். அதன் பின்பு தான் கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் பாடுபட வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார். மேலும்  “ஒருவர் தன் குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொள்ளவில்லை என்றால் அவரால் ஒரு குடும்பத்தை சிறப்பாக கவனித்துக் கொள்ள இயலாது” என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க : நாக்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிதின் கட்கரி பேசியது என்ன ?

Rahul Gandhi praises Nitin Gadkari – ராகுலின் ட்வீட்

அதனை குறிப்பிட்டு காட்டி “இந்த பாஜக கட்சியில் கொஞ்சம் தைரியம் உடையவர் நீங்கள் தான் நிதின் கட்கரி. அப்படியே ரஃபேல் பேர ஒப்பந்தம், விவசாயிகளின் நிலைமை மற்றும் அனில் அம்பானி, மற்றும் மத்திய அரசு நிறுவனங்களை அழித்தல் தொடர்பாகவும் தயவு செய்து பேசுங்கள் என்று கூறி ட்வீட் செய்துள்ளார்.

மேலும் மறந்துவிட்டேன்… வேலை வேலை வேலை… வேலைப்பற்றி கூற மறந்துவிட்டேன் என்று சிறிது நேரம் கழித்து மீண்டும் ட்வீட் செய்துள்ளார் ராகுல் காந்தி.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close