Rahul Gandhi Priyanka Gandhi Pays tribute : பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரில் இருந்து ஜம்முவிற்கு துணை ராணுவ வீரர்கள் இடமாற்றம் செய்யும் போது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பினர் நடத்திய இந்த தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.
Rahul Gandhi Priyanka Gandhi Pays tribute
இந்நிலையில் அவர்களின் குடும்பத்தாருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நம்பிக்கை வார்த்தைகளும், ஆறுதல் தரும் நடவடிவடைக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த அமித் குமார் கோரி என்ற வீரரின் வீட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜோதிராதித்ய சிந்தியா, ராஜ் பாபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை கூறியதோடு அவர்களின் துக்கத்திலும் பங்கெடுத்தனர் காங்கிரஸ் தலைவர்கள்.
”இது போன்ற இக்கட்டான சூழலில் உங்களின் துன்பத்தில் நாங்கள் பங்கேற்கின்றோம். நாங்கள் வருத்தப்படுகின்றோம் உங்கள் மகனின் இழப்பிற்கு. ஆனாலும் பெருமிதம் அடைகின்றோம்.
இந்த மண் தங்களின் அன்பையும் நேசத்தையும் உங்களின் மகன் மீது பொழிகின்றது. உங்கள் மகன் இந்த நாட்டிற்கு தன் உடல், உயிர் என அனைத்தையும் கொடுத்துள்ளார்.இதை நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம்” என்று கோரியின் தந்தையிடம் பேசியுள்ளார் ராகுல் காந்தி.
பிரியங்கா காந்தி அவர்களிடத்தில் பேசுகையில் உங்களின் வலி புரிகின்றது. நாங்களும் எங்கள் தந்தையை இப்படியான சூழலில் தான் இழக்க நேரிட்டது என்று கூறியுள்ளார்.
இங்கு கலந்து கொண்ட பின்பு, அதே பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட மற்றொரு வீரரின் அஞ்சலி நிகழ்விலும் அவர்கள் கலந்து கொண்டனர். கொல்லப்பட்ட 40 நபர்களில் 12 பேர் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.