வாரணாசியில் தனது சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு அல்லது மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருப்பார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ரேபரேலியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசுகையில், "நாடாளுமன்றத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தைக் குறைக்க ரேபரேலி, அமேதி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போராடியுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Had Priyanka fought from Varanasi, Modi would have lost: Rahul Gandhi
நானும், இந்தியா கூட்டணிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் முடிவுகள் குறித்து ஆணவம் கொள்ளமாட்டோம். மக்களின் நலனுக்காக உழைப்போம்.
ராமர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தின் போது, சாதாரண மக்களைப் புறக்கணித்துவிட்டு, தொழில்துறையினர் மற்றும் இதர பிரமுகர்களுக்கு மோடி முக்கியத்துவம் அளித்தார். அயோத்தியில் பா.ஜ.க-வின் தோல்வியை உறுதிசெய்து மக்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டினார்கள்." என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது சுருக்கமான உரையில், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் கட்சியின் வெற்றியை உறுதி செய்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“