scorecardresearch

பொது முடக்கம் பற்றி ராகுல் காந்தி – ரகுராம் ராஜன் வீடியோ உரையாடல்; 5 முக்கிய கேள்வி பதில்கள்

பொது முடக்கத்தை நீட்டிப்பதில் இந்தியா புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்றும் நாடும் முழுவதும் உள்ள மக்களை ஆதரிக்கும் திறன் இல்லாததால் இந்தியா பொருளாதார நடவடிக்கைகளை அளவான வழியில் தொடங்க வேண்டும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் கூறினார்.

raghuram rajan, rahul gandhi, raghuram rajan on coronavirus, ராகுல் காந்தி, ரகுராம் ராஜன், கொரோனா வைரஸ், பொது முடக்கம், ராகுல் காந்தி - ரகுராம் ராஜன் உரையாடல் வீடியோ, india coronavirus exit plan, raghuram rajan rahul gandhi chat, india coronavirus covid-19 cases
raghuram rajan, rahul gandhi, raghuram rajan on coronavirus, ராகுல் காந்தி, ரகுராம் ராஜன், கொரோனா வைரஸ், பொது முடக்கம், ராகுல் காந்தி – ரகுராம் ராஜன் உரையாடல் வீடியோ, india coronavirus exit plan, raghuram rajan rahul gandhi chat, india coronavirus covid-19 cases

பொது முடக்கத்தை நீட்டிப்பதில் இந்தியா புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்றும் நாடும் முழுவதும் உள்ள மக்களை ஆதரிக்கும் திறன் இல்லாததால் இந்தியா பொருளாதார நடவடிக்கைகளை அளவான வழியில் தொடங்க வேண்டும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் வியாழக்கிழமை வீடியோ உரையாடலில் கூறினார்.

கோவிட்-19 பொருளாதார தாக்கம், கொரோனா வைரஸ் பரிசோதனையை விரைவுபடுத்துதல் மற்றும் இந்தியா முன்னேற என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ராகுல் காந்தி, ரகுராம் ராஜனிடம் கேள்வி எழுப்பினார். அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் காங்கிரஸின் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. அவற்றில் இருந்து சில பகுதிகள் இங்கே அளிக்கப்படுகிறது.

ராகுல் காந்தி: இப்போது கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுதல் மற்றும் வைரஸின் விளைவுகளை எதிர்த்துப் போராடுதல் ஆகியவற்றுக்குப் பிறகு, 3-4 மாதங்கள் கழித்து நாட்டில் எவ்வாறு சமநிலையை உருவாக்குவது?

ரகுராம் ராஜன்: இதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நம்முடைய திறன்களும் வளங்களும் குறைவாகவே உள்ளன. நமது நிதி வளங்கள் மேற்கத்திய நாடுகளை விட குறைவானவை. நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இந்த பொருளாதாரத்தை எவ்வாறு ஒருங்கிணைத்து வைத்திருப்பது என்பதை தீர்மானிக்க வேண்டும்.

நாம் மீண்டும் திறக்கும்போது, அந்த நேரத்தில் மக்கள் நோய்வாய்ப்பட்ட படுக்கையில் இருந்து நடக்கவும், சாகாமல் இருக்கவும் வேண்டுமானால், உடனடியாக மக்களை நன்றாகவும் உயிருடனும் வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு உணவு மிகவும் முக்கியமானது.

பொது விநியோக முறை இல்லாத இடங்களில் அமர்த்தியா சென், அபிஜீத் பேனர்ஜி மற்றும் நான் தற்காலிக ரேஷன் கார்டுகள் பற்றி பேசியுள்ளோம். ஆனால், இந்த தொற்றுநோயை நீங்கள் முன்னெப்போதும் இல்லாத ஒரு சூழ்நிலையாக கருத வேண்டும். தேவையானதைச் சமாளிக்க நாம் விதிமுறைகளை மீற வேண்டும். ஒட்டுமொத்த பட்ஜெட் வரம்புகளும் உள்ளன என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நம்மிடம் பல வளங்கள் மட்டுமே உள்ளன.

ராகுல் காந்தி: டாக்டர் ராஜன், ஏழ்மையானவர்களுக்கு உதவ எவ்வளவு பணம் தேவைப்படும்?

ரகுராம் ராஜன்: தோராயமாக ரூ.65,000 கோடி தேவைப்படும். நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.200 லட்சம் கோடி. அதில் ரூ.65,000 கோடி என்பது ஒரு பெரிய தொகை இல்லை. எனவே, நாம் ஏழை மக்களுக்காக அதை செய்ய முடியும்.  ஏழை மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டுமென்றால், நாம் அதைச் செய்ய வேண்டும்.

ராகுல் காந்தி: ஆனால், கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, இந்தியா ஏதாவது உத்திகள் மூலம் நன்மைகளைப் பெறுமா? இந்தியா பயன்படுத்திக் கொள்ளக்கூடிய உலகளாவிய மாற்றங்கள் இருக்குமா?

ரகுராம் ராஜன்: இந்தியாவுக்கு ஏதேனும் வாய்ப்பு இருக்குமானால், அது அதற்கான உரையாடலை வடிவமைப்பதில் தான் உள்ளது. இரு பெரிய போரிடும் தரப்புகளில் ஒன்றாக இல்லாத காரணத்தால், அந்த உரையாடலில் ஒரு தலைவராக இருக்கும். ஆனால், உலகப் பொருளாதாரத்தில் இந்தியா அதன் குரலை ஒலிப்பதற்கு அது ஒரு பெரிய நாடு என்பது போதுமானது. இந்த சூழ்நிலையில், இந்தியா தனது தொழில்களுக்கும் அதன் விநியோகச் சங்கிலிகளுக்கும் வாய்ப்புகளைக் காணலாம். ஆனால், மிக முக்கியமாக, உலகளாவிய அளவில் அதிக நாடுகளுக்கு அதிக இடத்தைக் கொண்ட ஒரு உரையாடலை நாம் முயற்சித்து வடிவமைக்க முடியும். இது ஒரு ஒற்றை அல்லது இருமுனை உலகளாவிய ஒழுங்கைக் காட்டிலும் பல துருவ உலகளாவிய ஒழுங்கு ஆகும்.

ராகுல் காந்தி: சமத்துவமின்மையைக் கையாள்வதில் நீங்கள் எப்படி முன்னேற வேண்டும் என்ற யோசிப்பீர்கள். அது கோவிட்டிலும் வெளிப்படும் என்பது உங்களுக்குத் தெரியும். அதாவது, இந்தியா தனது ஏழை மக்களை நடத்தும் விதம், நமது ஏழை மக்களை நாம் நடத்தும் விதம், புலம்பெயர்ந்தோர் மற்றும் உயர் தட்டினரை நடத்தும் விதம், இரண்டு முற்றிலும் மாறுபட்ட கருத்துக்கள், இரண்டும் முற்றிலும் மாறுபட்ட இந்தியாக்கள்எனவே, இந்த இரண்டு இந்தியாக்களையும் எவ்வாறு ஒன்றாக்குகிறீர்கள்?

ரகுராம் ராஜன்: பிரமிட்டின் அடிப்பகுதி உங்களுக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை கொஞ்சம் சிறப்பாக மாற்ற சில வழிகள் உள்ளன. ஆனால், அடித்தட்டில் உள்ளவர்கள் அனைவரையும் சென்றடைவது குறித்து நாம் இன்னும் கவனமாக சிந்திக்க வேண்டும். அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் உணவு, உடல்நலம், கல்வி ஆகியவற்றில் பணியாற்றியுள்ளன. அந்த இடத்தில் சிறப்பான வேலையை நாம் செய்ய முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சவால்களைப் பொறுத்தவரையில், எல்லா இடங்களையும் அடைவதற்கும், அவர்களின் வாழ்க்கை நிலை மேம்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் ஒரு நிர்வாக சவால் நிச்சயமாக உள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது.

ஆனால், எனக்கு மிகப் பெரிய சவால் கீழ் நடுத்தர வர்க்கத்துக்கும் நடுத்தர வர்க்கத்துக்கும் இடையில் உள்ள பிரிவில்தான் உள்ளது. இந்த இடத்தில் நமக்கு ஒரு பெரிய வழியில், வேலைகள், நல்ல தரமான வேலைகள் தேவைப்படும். மக்கள் சர்க்கார் வேலை மற்றும் அதனுடன் வரும் வசதிகளைச் சார்ந்து இருக்கக்கூடாது.

அதனால், நாம் அந்த பகுதியில் வேலை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன், பொருளாதாரத்தில் மிகப்பெரிய விரிவாக்கம் முற்றிலும் அவசியம் என்று நான் நினைக்கிறேன். உண்மையில் ஏராளமான இளைஞர்கள் தொழிலாளர் சக்தியில் நுழையும்போது நமது பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் ஒரு முற்போக்கான சரிவு ஏற்படுவதை கடந்த பல ஆண்டுகளாக நாம் கண்டிருக்கிறோம்.

அதனால், சாத்தியக் கூறுகளுக்கு இடையில் நாம் தேர்வு செய்யக்கூடாது என்றுதான் நான் சொல்வேன். ஆனால், எந்தவொரு பகுதியையும் வளப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். ஏதாவது தவறு இருக்குமானால் அது நாம் கடந்த காலத்தில் செய்ததே. நாம் வெளியே செல்வதற்கான ஒரே வழி இதுதான்; அவுட் சோர்ஸிங் மென்பொருள் ஆகிய வளர்ந்த மிகவும் வெற்றிகரமான பகுதியைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்று கூறினோம். அது இந்தியாவின் பலமாக இருக்கும் என்று யார் நினைத்தார்கள்? அது இப்போதுதான் வளர்ந்துள்ளது. மேலும், அரசாங்கம் கவனம் செலுத்தாததால்தான் அது வளர்ந்தது என்று சிலர் வாதிடுகின்றனர். நான் அந்த முகாமில் இல்லை. ஆனால், எந்தவொரு சாத்தியத்தையும் நாம் அனுமதிக்க வேண்டும். மேலும் நம்முடைய மக்களின் நிறுவனத்தை அதன் பாதையில் செல்ல அனுமதிக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Rahul gandhi raghuram rajan interview video discussion on lockdown of covid 19 impact on indian economy

Best of Express