ராஜஸ்தான் சுற்றுலாத்துறை அமைச்சர் மகன் அனிருத், ராகுல் காந்தியை விமர்சித்ததற்காக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த ஒரு நாளுக்குப் பிறகு, மகனின் கருத்துக்களுடன் உடன்படவில்லை என்று விஸ்வேந்திர சிங் வியாழன் அன்று தெளிவுபடுத்தினார்.
சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துக்கான கேபினட் அமைச்சராக இருக்கும் விஸ்வேந்திர சிங் ஒரு அறிக்கையை வெளியிட்டு, இதுபோன்ற கருத்துக்கள் என்னுடன் தொடர்புபடுத்தப்படக் கூடாது, என்று கூறினார். அவர் கருத்துகளுடன் உடன்படவில்லை, அவற்றுடன் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை, இது ட்வீட் செய்தவரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம், என்றார்.
அனிருத்தின் கருத்துகள் அசோக் கெலாட் அரசாங்கத்தில் மூத்த அமைச்சராக இருக்கும் விஸ்வேந்திர சிங்கிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
புதன்கிழமை ட்விட்டரில், அனிருத் ராகுல் காந்தியை சாடினார். லண்டனில் பிரிட்டிஷ் ஹவுஸ் ஆஃப் காமன்ஸின் கிராண்ட் கமிட்டி அறையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கூறியதை மேற்கோள் காட்டி, “எங்கள் பாராளுமன்றத்தில் மைக்குகள் அமைதியாகிவிட்டன” என்று அனிருத் ட்வீட் செய்தார். அவருக்கு பித்து பிடித்துவிட்டது. மற்றொரு நாட்டின் பாராளுமன்றத்தில் சொந்த நாட்டை அவமதிக்கிறார். அவர் இத்தாலியை தனது தாயகமாகக் கருதுகிறார். ராகுலின் தாயும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி இத்தாலியில் பிறந்தவர்”, என்று விமர்சித்தார்.
மேலும் பாரதிய ஜனதா நித்தியமாக ஆட்சியில் இருக்காது என்று லண்டனில் நடந்த ஒரு நிகழ்வில் ராகுல் காந்தி கூறியது குறித்த மற்றொரு அறிக்கையை டேக் செய்து, ட்வீட் செய்த அனிருத்: “இந்தியாவில் இந்த குப்பைகளை எல்லாம் அவரால் பேச முடியாதா? அல்லது அவர் மரபணு ரீதியாக ஐரோப்பிய மண்ணை விரும்புகிறாரா? என்று சாடினார்.
அனிருத் தன்னை ஒரு சச்சின் பைலட் விசுவாசியாக அடையாளம் காட்டுகிறார். அவரது கருத்துக்கள் சில தரப்பினரிடமிருந்து, குறிப்பாக காங்கிரஸுக்குள் இருந்து விமர்சனத்தை தூண்டி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“