உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியை ராஜினாமா செய்கிறார் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை அறிவித்தார்.
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைவரும், தனது சகோதரியுமான பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று ராகுல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திங்களன்று காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைமை கார்கேவின் இல்லத்தில் கலந்துரையாடிய பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட மக்களவைத் தேர்தல் முடிவுகளில் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பிறகு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளின்படி ஒரு இடத்தை ராகுல் காலி செய்ய 14 நாள்கள் அவகாசம் இருந்தது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராகுல் ஏற்பாரா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக ராகுல் காந்தி, “நான் வயநாடு எம்பியாக வேண்டுமா அல்லது ரேபரேலியின் எம்பியாக வேண்டுமா என்ற குழப்பம் எனக்கு முன் உள்ளது. வயண்ட் மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டும் எனது முடிவில் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Rahul Gandhi relinquishes Lok Sabha seat in Kerala’s Wayanad, Priyanka to make electoral debut
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“