Advertisment

வடகிழக்கு மாநிலங்கள் போராட்டத்தை மறைப்பதற்காக என் மீது குற்றம் சாட்டுகிறார்கள் - ராகுல் காந்தி விமர்சனம்

பாலியல் பலாத்காரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கள் குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வில் வெள்ளிக்கிழமை மக்களவையில் ஆத்திரமடைந்த பாஜக தலைவர்கள் அவரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rahul gandhi, sathankulam incident ,

rahul gandhi, sathankulam incident , custodial murder

பாலியல் பலாத்காரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்களுக்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வில் வெள்ளிக்கிழமைமக்களவையில் ஆத்திரமடைந்த பாஜக தலைவர்கள் அவரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

Advertisment

குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தியின் கருத்துக்களைக் குறிப்பிட்டு, “வரலாற்றில் முதல் தடவையாக ஒரு தலைவர் இந்திய பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட வேண்டும் என்று ஒரு தெளிவான அழைப்பை விடுக்கிறார். இதுதான் நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தியின் செய்தியா? ” என்று ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், ஸ்மிரு இரானி, ராகுல் காந்தியின் கருத்துக்கள் அரசியல் கேலிக்குரியது என்றும் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ஜார்கண்டில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி “நரேந்திர மோடி மேக் இன் இந்தியா என்று கூறினார். ஆனால், இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரம்தான் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் நரேந்திர மோடியின் எம்.எல்.ஏ. ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். அதற்குப் பிறகு அந்த பெண் ஒரு விபத்தை சந்தித்தார். ஆனால், நரேந்திர மோடி அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை.” என்று உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் செங்கரை குறிப்பிட்டு ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.

இதனால், ராகுல் காந்தியின் கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்துவது குறித்து பேசிய ராகுல் காந்தி, “எனது செல்போனில் ஒரு வீடியோ கிளிப் உள்ளது. அதில் நரேந்திர மோடி டெல்லியை பாலியல் பலாத்கார தலைநகர் என்று அழைக்கிறார். அதை அனைவரும் பார்க்கும் வகையில் டுவிட் செய்யப்படும். எனது கருத்துகளுக்காக நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களில் இருந்து கவனத்தை திசை திருப்பவே என்னுடைய கருத்து பாஜகவால் ஒரு பிரச்னையாக மாற்றப்படுகிறது.” என்று ராகுல் காந்தி கூறினார்.

இன்று மக்களவை கூடியவுடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு எதிராக பல பாஜக உறுப்பினர்கள் ஒத்திவைப்பு அறிவிப்புகளை வழங்கியுள்ளதாகவும் அவர்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

மக்களவை நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டன. முதலில் அரை மணி நேரமும் பின்னர் மேலும் 15 நிமிடங்களும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், சபையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபோன்ற தலைவர்களுக்கு சபையின் உறுப்பினர்களாக இருக்க தார்மீக உரிமை இல்லை என்று கீழ் சபையின் துணைத் தலைவரான மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். ராகுல் காந்தி மக்களவையில் மதியம் கலந்து கொண்டார்.

மேக் இன் இந்தியா பாலியல் பலாத்கார இந்தியாவாக மாறிவிட்டது என்று கருத்து தெரிவித்ததன் மூலம் ராகுல் காந்தி பெண்களை அவமதித்ததாக பாஜக எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி கூறினார். மேலும், அவர் எல்லா ஆண்களும் பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் அல்ல என்று கூறினார்.

இருப்பினும், ராகுல் காந்தியை ஆதரித்துப் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, “பிரதமர் மோடி மேக் இன் இந்தியா என்று கூறினார். அதை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், நாட்டில் என்ன நடக்கிறது? அதைத்தான் ராகுல் காந்தி சொல்ல நினைத்தார். துரதிர்ஷ்டவசமாக, மேக் இன் இந்தியா நடப்பதில்லை... நாட்டில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். இதுதான் கவலையாக உள்ளது” என்று கூறினார்.

Bjp Rahul Gandhi All India Congress Smriti Irani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment