பஞ்சாபில் சலசலப்பை ஏற்படுத்திய ராகுல் காந்தியின் காவி தலைப்பாகை - Rahul Gandhi saffron turban sparks row in Punjab | Indian Express Tamil

பஞ்சாபில் சலசலப்பை ஏற்படுத்திய ராகுல் காந்தியின் காவி தலைப்பாகை

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை பஞ்சாபில் தொடங்குவதற்கு முன்னதாக பொற்கோவிலுக்குச் சென்றார். ராகுல் காந்தி அணிந்திருந்த காவி தலைப்பாகை பஞ்சாபில் சலசலப்பை ஏற்படுத்தியது. போராளிகளின் நினைகளை கிளறியுள்ளது.

Bharat Jodo Yatra, Rahul Gandhi, Rahul Gandhi saffron turban sparks row in Punjab, பஞ்சாபில் சலசலப்பை ஏற்படுத்திய ராகுல் காந்தியின் காவி தலைப்பாகை, ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை, காங்கிரஸ், பஞ்சாப், Kesari Turban, Sikhs Turban, Rahul Gandhi in Goden Temple

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை பஞ்சாபில் தொடங்குவதற்கு முன்னதாக பொற்கோவிலுக்குச் சென்றார். ராகுல் காந்தி அணிந்திருந்த காவி தலைப்பாகை பஞ்சாபில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. போராளிகளின் நினைகளை கிளறியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காவி தலைப்பாகை அணிந்து பஞ்சாபில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘கேசரி’ (காவி) வண்ண தலைப்பாகை சீக்கியப் போராளிகளால் பயன்படுத்தப்பட்டது என்பதால், இது போராளிகளின் காலத்தை நினைவுபடுத்துகிறது என்று பலர் கூறுகின்றனர்.

பா.ஜ.க தலைவரும், டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவின் முன்னாள் தலைவருமான மஞ்சிந்தர் சிங் சிர்சா, ராகுல் காந்தியின் எடிட் செய்யப்பட்ட வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், ராகுல் காந்தி ‘கேசரி’ வண்ணம் எப்படி வித்தியாசமானது என்று கேட்கிறார். அதற்கு பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா உடனே, அப்படி எந்த வித்தியாசமும் இல்லை என்று பதில் சொல்கிறார்.

“இது புனித நிஷான் சாஹிப்பின் வண்ணம் மட்டுமல்ல, கேசரி வண்ணம் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பின் நிறம். இது நமது தேசியக் கொடியிலும் ஒரு வண்ணமாக இருக்கிறது. இந்த வீடியோவில் ராகுல் காந்தி உட்பட அனைவரும் தஸ்தாரின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள். எந்த உணர்ச்சியும் மரியாதையும் இல்லாமல் அணிந்திருந்தார்கள். இது எவ்வளவு போலியானது” என்று சிர்சா ஒரு ட்வீட்டில் கூறினார். செவ்வாய்க்கிழமை ராகுல் காந்தி அமிர்தசரஸில் இறங்கிய உடனேயே எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டார்.

‘கேசரி’ வண்ண தலைப்பாகை அணிந்த ராகுல் காந்தியின் புகைப்படங்கள் பஞ்சாபில் வைரலாக பரவிய நிலையில், 80-கள்மற்றும் 90-களில் பஞ்சாபில் சீக்கிய போராளிகள் இந்த வண்ணத்தை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதும், தலையில் ‘கேசரி’ தலைப்பாகை அணிவதும் இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தவும் காவல்துறைக்கு போதுமான காரணம் என்பதை சமூக ஊடக பதிவுகள் சுட்டிக்காட்டுக்கின்றன.

‘கேசரி’ வண்ணமும் சீக்கியர்களும்

சீக்கியர்களுக்கு நீல வண்ணம் பெரும் வரலாற்றையும் மத முக்கியத்துவத்தையும் கொண்டது. 1799-ல் மகாராஜா ரஞ்சித் சிங் சீக்கிய ராஜ்ஜியத்தை நிறுவுவதற்கு முன்பு, மத மற்றும் தற்காப்பு நடைமுறைகளுக்கு இந்த வண்ணம் பயன்படுத்தப்பட்டதாக பெரும்பாலான வரலாற்று குறிப்புகள் குறிப்பிடுகின்றன. இருப்பினும், சில குறிப்புகள் முதல் சீக்கிய குருக்களின் காலத்தில் ‘கேசரி’ கொடிகளைப் பயன்படுத்தியதைக் குறிப்பிடுகின்றன.

மகாராஜா ரஞ்சித் சிங்கின் காலத்தில் சீக்கியர்களிடையே கேசரி வண்ணம் பிரபலமாக இருந்தது. ஆனால், அவரது ராணுவத்தின் வெவ்வேறு பட்டாலியன்கள் வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் வெவ்வேறு பாணி கொடிகளைக் கொண்டிருந்தன. இந்து மரபுகளுடன் மிகவும் இணைந்ததாகக் கருதப்படும் உதாசி துறவிகளும் நிர்மலா பிரிவினர் குறிப்பாக குருத்வாராக்களில் ‘கேசரி’ வண்ணத்தைப் பரப்புவதில் பங்கு வகித்தனர். ‘கேசரி’ வண்ணமும் ‘பகவா’ நிழல்கள் இந்து மதத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக இருப்பதால், சில சீக்கிய எழுத்தாளர்கள் சீக்கியர்களிடையே காவி நிறத்தின் செல்வாக்கு பிரபலமான இந்து கலாச்சாரத்தின் விளைவு என்று வாதிட்டனர்.

நிஹாங் அமைப்புகளும் அவற்றின் குருத்வாராக்களும் நீல நிறக் கொடிகளை மட்டுமே பயன்படுத்துகின்றன. சிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி (எஸ்.ஜி.பி.சி) வெளியிட்ட அதிகாரப்பூர்வ சீக்கிய நடத்தை விதிகள் சீக்கியக் கொடிகளுக்கு ‘கேசரி’ வண்ணம் கூடாது, ‘பசந்தி’ மற்றும் ‘நீலம்’ வண்ணங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகின்றன. இருப்பினும், அனைத்து சிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி குருத்வாராக்களிலும் உள்ள கொடிகள் ‘கேசரி’ வண்ணத்தில் உள்ளன.

‘கேசரி’ தலைப்பாகையும் போர்க்குணமும்

சீக்கியக் கொடிகளில் ‘கேசரி’ வண்ணம் பயன்படுத்தப்பட்டாலும், அது போராளிகளின் காலத்தில்தான் தலைப்பாகை வண்ணமாகப் பிரபலமடைந்தது. போராளிகளின் அழைப்புக்குப் பிறகு, அம்மாநிலத்தில் உள்ள பல தனியார் பள்ளிகள் பள்ளி சீருடையில் இந்த வண்ணத்தைப் பயன்படுத்தத் தொடங்கின. போராளிகள் இந்த நிறத்தை பிரபலப்படுத்தியதால், ‘கேசரி’ தலைப்பாகை அல்லது துப்பட்டா அணிந்தவர்களை போராளிகளின் ஆதரவாளர்கள் என்று போலீசார் சந்தேகிக்கத் தொடங்கினர்.

பஞ்சாபில் தீவிரவாதம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, தற்போது டெல்லி எம்.பி.யாக இருக்கும் பஞ்சாபி பாடகர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், ‘கேசரி’ தலைப்பாகை அணிந்து ‘பட்ட பட்ட சிங்கன் டா வைரி’ என்ற பாடலைப் பாடியிருந்தார். இந்தப் பாடல் 18-ம் நூற்றாண்டு சீக்கியர்கள் முகலாயர்கள் மற்றும் ஆப்கானியர்களால் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ‘சுனேஹ்ரி’ தலைப்பாகை அணிந்திருந்த சமகால சீக்கியப் போராளிகளைப் பற்றிப் பேசுவதாகக் காணப்பட்டது. போராளிகளைக் கவர்வதற்காக ‘கேசரி’ வண்ணத்தை குறிப்பிட்டு, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் பாடிய இந்த பாடல் அவருடைய வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் பெரிய வெற்றியைப் பெற்றது.

2012-ல், முன்னாள் பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங் கொலை வழக்கில் குற்றவாளி பல்வந்த் சிங் ரஜோனாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிராக ஒரு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. ரஜோனாவின் ஆதரவாளர்களால் பஞ்சாப் முழுவதும் வீடுகளில் ‘கேசரி’ வண்ண கொடிகள் ஏற்றப்பட்டன. இதையடுத்து, அவருடைய மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Rahul gandhi saffron turban sparks row in punjab