Advertisment

இந்தியாவின் எதிர்காலத்தை கட்டி எழுப்பும் திட்டம் இல்லை: பட்ஜெட் பற்றி ராகுல் காந்தி

2023-24-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பிறகு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்த விமர்சனம் வந்துள்ளது.

author-image
WebDesk
New Update
mitr kaal budget, union budget news, central budget announcement, budget news, Rahul Gandhi budget, oppositions on budget, finance minister budget press conference, Latest news, Indian Express

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை மோடி அரசாங்கத்தை கடுமையாக சாடினார். மோடி அரசின் ‘மித்ர கால்’ பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பார்வை இல்லை. அதே போல், பணவீக்கத்தை சமாளிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும், இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்பதை நிரூபித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisment

2023-24-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பிறகு, ராகுல் காந்தியின் எதிர்வினை வந்துள்ளது. அதில் அரசாங்கம் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்தியது. சிறு சேமிப்புகளில் செலவழித்தது, கடந்த பத்தாண்டுகளில் மூலதனச் செலவினங்களில் மிகப்பெரிய உயர்வுகளை அறிவித்துள்ளது.

“மித்ர கால்' பட்ஜெட்டில்: வேலைகளை உருவாக்குவதற்கான பார்வை இல்லை. செலவுகளை சமாளிக்க எந்த திட்டமும் இல்லை. சமத்துவமின்மையைத் தடுக்கும் நோக்கம் இல்லை. 1% பணக்காரர்களிடம் 40% செல்வம் உள்ளது, 50% ஏழைகள் ஊதியத்தில் 64% ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள், 42% இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் - ஆனாலும், பிரதமர் கவலைப்படவில்லை” என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

“இந்தியாவின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை என்பதை இந்த பட்ஜெட் நிரூபிக்கிறது” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Rahul Gandhi Budget 2022 23 Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment