/indian-express-tamil/media/media_files/KtZbx7crUR4fG5ZdUvSO.jpg)
அல்வா கிண்டு நிகழ்ச்சியில் ஒரு ஓ.பி.சி, ஒரு பழங்குடி, ஒரு தலித் அதிகாரிகூட இல்லை என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தபோது, முகத்தை மூடிக்கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட் 2024 மீது மக்களவையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பட்ஜெட்டுக்கு முன்னதாக நடக்கும் பாரம்பரிய ‘அல்வா’ கிண்டும் நிகழ்ச்சியின் புகைப்படத்தைக் காட்டி, அந்தப் புகைப்படத்தில் ஒரு ஓ.பி.சி அதிகாரி, பழங்குடியினர் அல்லது தலித் அதிகாரிகள் யாருமே இல்லை என்று கூறினார்.
மேலும், 2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கும் போது, மக்கள் தொகையில் 73% உள்ள மக்களின் பிரதிநிதித்துவம் இல்லை என்று காந்தி சுட்டிக்காட்டினார்.
மத்திய பட்ஜெட் 2024 குறித்து மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பட்ஜெட்டுக்கு முன்பாக அல்வா கிண்டும் பாரம்பரிய நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் காட்டி, “இந்த புகைப்படத்தில் பட்ஜெட் அல்வா விநியோகிக்கப்படுகிறது. இதில் ஒரு ஓ.பி.சி, பழங்குடி அல்லது தலித் அதிகாரிகளை என்னால் பார்க்க முடியவில்லை. 20 அதிகாரிகள் இந்திய பட்ஜெட்டைத் தயாரித்துள்ளனர்” என்று ராகுல் காந்தி கூறினார். மேலும், 2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கும் போது, மக்கள் தொகையில் 73 சதவீதம் உள்ள மக்களின் பிரதிநிதித்துவம் இல்லை” என்று கூறினார்.
#WATCH | In Lok Sabha, LoP Rahul Gandhi shows a poster of the traditional Halwa ceremony, held at the Ministry of Finance before the Budget session.
— ANI (@ANI) July 29, 2024
He says, "Budget ka halwa' is being distributed in this photo. I can't see one OBC or tribal or a Dalit officer in this. Desh ka… pic.twitter.com/BiFRB0VTk3
பட்ஜெட் முன்பாக அல்வா கிண்டும் நிகழ்ச்சியின் புகைப்படத்தைக் காட்டி, இதில் ஒரு ஓ.பி.சி, ஒரு பழங்குடியினர், ஒரு தலித் அதிகாரி யாரும் இல்லை என்று ராகுல் காந்தி பேசியபோது, அவையில் இருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முகத்தை மூடிக்கொண்டார். இந்த நிகழ்வின்போது பதிவான வீடியோ இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.