மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி பொறுப்பை கொடுத்த மக்களுக்கு நன்றி என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
4 மாநிலத் தேர்தல் முடிவுகளில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது. இதில், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் பி.ஆர்.எஸ் கட்சியை வெளியேற்றி, காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி முதலமைச்சராகிறார்.
இந்நிலையில், 4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்; தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி பொறுப்பை கொடுத்த மக்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி பொறுப்பை கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். தெலங்கானா மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“