தேர்தலுக்குத் தயாராகும் காங்கிரஸ் கட்சி
மோடி ஆட்சிக்கு வந்து அடுத்தவருத்துடன் 5 வருடம் நிறைவடைகிற நிலையில், பொதுத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது இந்தியா. அனைத்துக் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் மும்பரமாக தயாராகி வருகின்ற நிலையில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் நேற்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அதில் காங்கிரஸ் கட்சி உருவாக்கியிருக்கும் மூன்று முக்கிய குழுக்கள் மற்றும் அப்பட்டியலில் இடம் பெற்றவர்கள் பெயரையும் தெரிவித்தார்.
மூன்று முக்கிய குழுவும் அதில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும்
மையக்குழுவில் இடம் பெற்ற உறுப்பினர்கள்
ஒன்பது பேர் கொண்ட மையக்குழுவில் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் அஹ்மது படேல், மூத்த உறுப்பினர்கள் ஏ.கே. ஆந்தோனி, ப.சிதம்பரம், மற்றும் குலாம் நபி அசாத், அசோக் கெலோட், மல்லிகார்ஜூன் கார்கே, கே.சி.வேணுகோபா, ஜெய்ராம் ராமேஷ், மற்றும் ரந்தீப் சுர்ஜிவாலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இவர்கள் அனைவரும் 2014ம் ஆண்டு தேர்தல் பிரச்சார திட்டங்கள் எதிலும் பங்குகொள்ளாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமை இரவு லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பேசிய ராகுல் காந்தி, வரும் பொதுத்தேர்தல் மிகவும் நேர் விதமாக பாஜகவிற்கும் மற்ற அணிகளுக்கும் இடையேயான போட்டியாகத்தான் இருக்கப் போகிறது என்று கூறினார்.
இச்செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
தேர்தல் அறிக்கைக் குழுவில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்
தேர்தல் அறிக்கைக் குழுவிற்கும் 19 பேர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் பஞ்சாப் நிதி அமைச்சர் மன்ப்ரீத் படால், சுஷ்மிதா தேவ், ராஜீவ் கௌடா, பிந்து கிருஷ்ணன், ரகுவீர் மீனா, பாலச்சந்திர முங்கேக்கர், சச்சின் ராவ், லத்தேஷ் திருப்பதி, ரஜ்னி பட்டில், புபிந்தர் சிங் ஹூடா, ஜெய்ராம் ரமேஷ், சல்மான் குர்ஷித், சசிதரூர், குமரி செல்ஜா, மேகலாயாவின் முன்னாள் முதலமைச்சர் முகுல் சங்மா, தம்ரத்வாஜ் சாஹூ, மீனாட்சி நடராஜன், மற்றும் சாம் பித்ரோதா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
விளம்பரக் குழுவில் இடம்பெற்ற தலைவர்கள்
முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆனந்த் சர்மா, மணிஷ் திவாரி, ராஜீவ் சுக்லா, மக்களவை முன்னாள் உறுப்பினர் பிரமோத் திவாரி, சமூக ஊடக பிரிவின் தலைவர் திவ்யா ஸ்பந்தனா, ரன்தீப் சுர்ஜேவாலா, பக்த சரண் தாஸ், பிரவீண் சக்கரவர்த்தி, மிலிந்த் தியோரா, குமார் கெட்கர், பவன் கேரா, ஜெய்வீர் ஷெர்கில், வி.டி.சதீசன் ஆகிய 13 பேர் இடம்பெற்று உள்ளனர்.
இந்த மூன்று குழுவிலும் தமிழகத்தை சேர்ந்த ஒரே ஒரு தலைவர் ப.சிதம்பரம் மட்டுமே இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் முக்கிய குழு, தேர்தல் அறிக்கை குழு ஆகிய இரு குழுக்களில் இடம் பெற்று உள்ளார்.