/indian-express-tamil/media/media_files/q2A8x2wsPp5X00FiEXy8.jpg)
கர்நாடகா மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் தமிழகம் சென்னை வழியாக சென்று கொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்னால் பாக்மதி விரைவு ரயில் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டது, 2 பெட்டிகள் தீ பற்றிய எரிந்தது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை. 12 மணி நேரத்திற்கும் மேலாக கவரைப்பேட்டையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த ரயில் விபத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
The Mysuru-Darbhanga train accident mirrors the horrific Balasore accident—a passenger train colliding with a stationary goods train.
— Rahul Gandhi (@RahulGandhi) October 12, 2024
Despite many lives lost in numerous accidents, no lessons are learned. Accountability starts at the top. How many more families must be… https://t.co/ggCGlgCXOE
அவர் வெளியிட்ட பதிவில், "ஒடிசா மாநிலம் பாலாசோரில் நடந்த ரயில் விபத்து போலவே கவரைப்பேட்டையிலும் விபத்து நடந்துள்ளது; ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை.
இந்த அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிக்க வேண்டும்?" எனக் காட்டமாக தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.