காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீப காலமாகவே ட்விட்டரில் அதிக செயல்பாட்டுடன் இருந்து வருகிறார். இந்தியாவில் நடக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். இவரின் கருத்துகள் பெரும்பாலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. இந்தச் சூழலில் நேற்று அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பகிர்வு மேலும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரச்சாரம் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் நேருக்கு நேர் பலமாக மோதிக்கொள்கிறது. இதில் மோடி மற்றும் ராகுல் காந்தி ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவது வழக்கமாகிவிட்டது. ஏற்கனவே ராகுல் காந்தி பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்று கூறிய கருத்தை மோடி கேலி செய்துள்ளது விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரும் கருத்துகளும் பகிர்வுகளும் பெரும்பாலானோர் வேடிக்கையாக விமர்சிப்பது வாடிக்கையாகிவிட்டது. எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல கூடுதல் விமர்சனத்தைத் தானே தேடிக்கொண்டுள்ளார் ராகுல்.
/tamil-ie/media/media_files/uploads/2018/05/Rahul-Gandhi-ice-cream-parlour-2-300x225.jpg)
நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பெங்களூரூவில் உள்ள ஐஸ் கிரீம் கடையில் இவர் சாப்பிட்ட ஐஸ் கிரீம் மற்றும் அந்த கடை பற்றி பெருமையாகக் கூறியுள்ளார். அக்கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டுடார்.
,
இதனைத் தனது டிவிட்டர் பகிர்ந்தது மட்டுமல்லாமல், அதில் “ முழு நாள் பிரச்சாரத்திற்கு பிறகு பெங்களூரூவில் உள்ள இந்த ஐஸ் கிரீம் கடையில் ஐஸ் கிரீம் சாப்பிடுவது சிறப்பாக இருக்கிறது. இங்கு ஐ கிரீம் சுவையாக உள்ளது. இந்தக் கடையில் ஊழியர்கள் நட்புடன் பழகுகிறார்கள் மற்றும் உதவியாகவும் இருக்கிறார்கள். இந்தக் கடை நிறுவனர் மற்றும் கஸ்டமர்ஸை சந்தித்ததில் மகிழ்ச்சி. மீண்டும் சந்திப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/05/Rahul-Gandhi-ice-cream-parlour-1-300x213.jpg)
இவ்வாறு அவர் பகிர்ந்துள்ள இந்தப் பதிவு விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. பலரும் பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் ஐஸ் கிரீம் விளம்பரம் தேவையா என்று கேட்டுள்ளனர். மேலும் சிலர் ஐஸ் கிரீம் கடையிலும் ராகுல் அரசியல் ஆதாயம் தேடுகிறார் என்று கூறி வருகின்றனர்.